அப்போ விருப்பபட்டு போய்விட்டு இப்போது மீடு என்று புகார் அளிப்பது எதற்க்காக? ஒரு தவறு நடக்கும்போதே சொல்லாமல் இப்போது சொல்லது எதற்காக என்று பழம்பெரும் நடிகை வென்னிற ஆடை நிர்மலா கேள்வி எழுப்பியுள்ளார்
தமிழ் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக மீடு விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்து வந்தது. இதில் முன்னணி நடிகர்கள் முதல் இயக்குனர்கள் கவிஞர்கள் என பலர் மீது பல புகார்கள் குவிந்து வந்தது. இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சினிமாவை விட்டு விலகிய நடிகைகள் கூட இதில் புகார் அளித்திருந்தனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பல அடுக்கடுக்கான புகார்களை பதிவு செய்திருந்தார். இந்த விவாகரம் தமிழ் திரையுலகில் பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், இணையத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பலராலும் விவாதிகக்ப்பட்டது. மேலும் சின்மயி புகார் குறித்து கவிஞர் வைரமுத்து மீது வழக்குபதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது 10-க்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் அளித்திருக்கிறார்கள். ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாடகி சின்மயி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதன் காரணமாக மீடு விவாகரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இது குறித்து பழம்பெரும் நடிகை வென்னிற ஆடை நிர்மலா கூறுகையில், மீடுனு இன்னைக்கு சொல்றவங்க அன்னைங்கு என்ன பண்ணாங்க. இவர்களுக்கு எதோ ஒரு விதத்தில் எதோ ஒரு வேலை நடக்க வேண்டும் என்பதற்காகத்தானே இவர்கள் போனார்கள். அப்போது போய்விட்டு இப்போது வந்து புகார் கொடுக்கிறார்கள்.
அப்போது சொல்லாமல் அந்த மனுஷன் பேரன் பேத்தி எடுத்து நல்ல அந்தஸ்தில் இருக்கும்போது எனக்கு மனசு அறுக்குது துடைக்குது அப்போ அவர் அப்படி பண்ணார் என்று இப்போ சொல்றாங்க. அது நடக்கும்போது என்ன பண்ணிட்டு இருந்தாங்க. இவங்க ஏன் போனாங்க. மீடு விவகாரத்தை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். மீடு விவகாரம் தேவையில்லாத ஒன்று. அவர்களுக்கு ஒரு வேலை நடக்கனும். அது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அப்படி இருந்துவிட்டு இப்போ வந்து மீடு மீடுனு சொன்னா ஆரம்பிச்சாக்க அப்போ எதற்காக இவர்கள் பேசாம இருந்தாங்க.
இத்தனை நாள் எதற்காக வாய முடிக்கிட்டு இருந்தாங்க அவர் ஒரு அந்தஸ்தில் இருக்கிறார் என்பதால், கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வெயிட் பண்ணிட்டு இருந்தாங்களா? மீடு ஒரு கன்றாவியான ஒரு விஷயம் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“