ரஜினி, கமலுக்கு மகள், 2 படங்களில் விஜய்க்கு தங்கை; குழந்தை நட்சத்திரமான இவர், இப்போ சோலோ ஹீரோயின்!

ரஜினி, கமல் இருவருக்கும் மகளாக நடித்த நடிகை, 2 படங்களில் விஜய்க்கு தங்கையாக நடித்துள்ளார். இப்போது தெலுங்கு சினிமாவில் சோலோ ஹீரோயினாக வலம் வருகிறார்.

ரஜினி, கமல் இருவருக்கும் மகளாக நடித்த நடிகை, 2 படங்களில் விஜய்க்கு தங்கையாக நடித்துள்ளார். இப்போது தெலுங்கு சினிமாவில் சோலோ ஹீரோயினாக வலம் வருகிறார்.

author-image
WebDesk
New Update
Nivetha Thamos

சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகை முன்னணி நடிகர் ஒருவருக்கு மகளாக நடித்தால், அடுத்து ஒரு இளம் அல்லது புதுமுக நடிகர் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக கமிட் ஆவார். அதேபோல் மற்றொரு முன்னணி நடிகருக்கும் மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் ரஜினி, கமல் இருவருக்கும் மகளாக நடித்த நடிகை இப்போது எப்படி இருக்கிறார் பார்ப்போமா?

Advertisment

தமிழ் சினிமாவில் 90-களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பல நடிகைகள் இன்றைக்கு முன்னணி நடிகையாக வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் ஒரு நடிகை தான் நிவேதா தாமஸ். கடந்த 2000-ம் ஆண்டு சன்டிவியில் ஒளிபரப்பான ராஜ ராஜேஸ்வரி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், அடுத்து, 2004-ம் ஆண்டு ஒளிபரப்பான மை டியர் பூதம் தொடரின் மூலம் குட்டீஸ்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். அந்த சீரியலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Nivetha Thamos Vijay

தொடர்ந்து, சிவமயம் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்திருந்த இவர், 2008-ம் ஆண்டு விருதே ஒரு பாரியா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, குருவி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்த இவர், சசிகுமார் நடிப்பில் வெளியான போராளி படத்தில் 2-வது நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் வெற்றியை கொடுத்த நிலையில், நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா, உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில் ஜில்லா படத்தில் மீண்டும் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.

Advertisment
Advertisements

Nivetha Thamos Kamal

2015-ம் ஆண்டு வெளியான பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மூத்த மகளாக நடித்திருந்தார். மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்காக வெளியான இந்த படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு தெலுங்கில் நானியுடன் ஜெண்டில்மேன், நின்னுக்கோரி, ஜூனியர் என்டிஆருடன் ஜெய் லவ குசா, கல்யாண் ராமுடன் 118, உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர், 2020-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்தார்.

Nivetha Thamos Rajini

தர்பார் படத்திற்கு பிறகு தமிழில் நடிக்காத நிவேதா தாமஸ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருந்தார். கடைசியாக கடந்த 2024-ம் ஆண்டு வெளியான 35 என்ற படத்தில் நடித்திருந்தார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த படத்தின் கதை அமைக்க்பபட்டிருந்தது. குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்க்கு தங்கையாகவும், மூத்த நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு மகளாகவும் நடித்த பெருமை நிவேதா தாமஸ்க்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

nivetha thomas tamil cinema actress Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: