/indian-express-tamil/media/media_files/2025/08/26/thillu-mullu-rajini-sister-2025-08-26-23-38-03.jpg)
தமிழ் சினிமாவில் 80-களில் இளமையாக நடித்த நடிககைகள் பலரும் இன்றைக்கு சினிமாவில் வில்லி கேரக்டரில் அசத்தி வருகின்றனர். அந்த வகையில், ரஜினிகாந்த் நடித்த தில்லு முள்ளு படத்தில் அவரின் தங்கையாக நடித்த நடிகை இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் தெரியுமா?
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் கடந்த 1981-ம் ஆண்டு வெளியான படம் தில்லு முல்லு. ரஜினிகாந்த், தெங்காய் ஸ்ரீனிவாசன், மாதவி, பூர்ணம் விஸ்வநாதன், சவுக்கார் ஜானகி, நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தில் கமல்ஹாசன், லட்சுமி, பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தில் ரஜினிகாந்த் 2 கேரக்டரில் நடித்து காமெடியில் அசத்தியிருப்பார்.
இந்த படத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன், சீரியஸாக நடித்திருக்கும் காட்சிகள் அனைத்துமே சிரிப்பின் உச்சமாக இருக்கும். கடந்த 2013-ம் ஆண்டு மிர்ச்சி சிவா நடிப்பில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது இதில் தேங்காய் ஸ்ரீனிவாசன் கேரக்டரில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படத்தின் முதல் காட்சியே, அவரின் தங்கை கேரக்டரான உமா காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு, காய்கறி வாங்கிக்கொண்டு சொல்வார். அப்போது அவரது அங்கிளின் கார் அவர் மீது மோதுவது போல் வரும்.
படத்தின் தொடக்க காட்சி இதுவாக இருக்கும் நிலையில், இதேபோன்ற ஒரு காட்சி தான் க்ளைமேக்ஸிலும் இருக்கும். இந்த உமா கேரக்டரில் நடித்து பலமுறை ரஜினிகாந்தை ஆபத்தில் இருந்து காப்பற்றிய அந்த நடிகை யார் தெரியுமா? இன்றைய சினிமாவில் வில்லத்தனம் கலந்த ரஃப் கேரக்டரில் நடித்து அசத்தி வரும் நடிகை விஜி சந்திரசேகர் தான். பழம்பெரும் நடிகை சரிதாவின் தங்கையான இவர், தில்லு முல்லு படத்தில் தான் அறிமுகம் ஆனார். இந்த படம் வெற்றியை பெற்றாலும் அவருக்கு அடுத்து வாய்ப்பு கிடைக்கவில்லை.
10 வருட இடைவெளிக்கு பிறகு, 1991-ம் ஆண்டு கலியுகம் என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு, 1993-ம் ஆண்டு வெளியான கிழக்கு சீமையிலே படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கிய வீஜி சந்திரசேகர், பார்தாலே பரவசம், ஆயுத எழுத்து ஜோர் ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதில் ஜோர் 2004-ம் ஆண்டு வெளியானது. அதன்பிறகு 8 வருட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் 2012-ம் ஆண்டு ஆரோகணம் என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த பெரும்பாலான கேரக்டர்கள் வில்லி தான்.
குறிப்பாக மதயானை கூட்டம் திரைப்படத்தில் கலையரசனின் அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார், இவரது கேரக்டர் நல்லவரா கெட்டவரா என்ற சந்தேகத்தை கடைசிவரை கொடுத்திருந்த விஜி சந்திரசேகர், சூர்யாவுடன எதற்கும் தணிந்தவன், கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் அம்மாவாக நடித்திருந்தார். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கேப்டன் மில்லர் படத்தில் தனுஷின் அம்மாவாக நடித்திருந்த இவர், கடைசியாக டி.என்.ஏ படத்தில் நாயகியின் அம்மாவாக நடித்திருந்தார். சினிமா மட்டும் இல்லாமல் பல சீரியல்களிலும் விஜி சந்திரசேகர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.