ஜெ. மடியில் குழந்தையாக… இந்த விஜய் டிவி நடிகை யாரென்று தெரிகிறதா?

விஜய் டிவி பிரபலம் ஒருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களி்ல் வைரலாகி வருகிறது.

Vijay TV VJ Ramya With farmer CM Jayalalitha : விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு உட்பட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் விஜே ரம்யா. சின்னத்திரையில் பிரபலமான இவர், மொழி, மங்காத்தா, ஓ காதல் கண்மனி, சமீபத்தில் வெளியான மாஸ்டர் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.  விஜே, நடிகை இதையெல்லாம் கடந்து ஃபிட்னெஸில் ஆர்வம் கொண்ட ரம்யா, ஒரு சில பளுதூக்கும் போட்டிகளிலும் கலந்துகொண்டுள்ளார். மேலும் கடந்த 2004-ம் ஆண்டு சென்னையில், நடைபெற்ற மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்டார்.

கடந்த பொங்கல்  தினத்தில் விஜயுடன் இவர் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த வாரம் சமுத்திரகனியுடன் இவர் நடித்த சங்கத்தலைவன் படம் வெளியாகியுள்ளது. மேலும் தனக்கொன தனியாக யூடியூப் சேனல் வைத்துள்ள ரம்யா, ஃபிட்னெஸ் மற்றும் லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை தனது  ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ரம்யா தான் குழந்தை பருவத்தில் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது பதிவில், தான் சிறுவயதில் இருக்கும்போது தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலாக இருந்த தனது தந்தை முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க சென்றபோது தங்களையும் அழைத்துச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும்  ஜெயலலிதா தன்னை தூக்கி மடியில் உட்கார வைத்து காப்பி கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema actress vj ramya with jayalalitha viral photo

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com