ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1-ந் தேதி உலக மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. உயிரை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் தான் தேவை என்ற நிலை காலம் காலமாக இருந்து வருகிறது. இதனால் நோயாளிகள் பலரும் மருத்துவர்களையே தங்களது கடவுள்களாக பார்க்கின்றனர். ஒருவர் மருத்துவம் படித்தால் தனியாக மருத்துவமனை நடத்துவதும், மக்களுக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமல்லாமல், தங்களுக்கு பிடித்த வேலைகளையும் செய்வார்கள்.
அந்த வகையில் ஒரு சில நடிகைகள் மருத்துவம் படித்துவிட்டு, நடிப்பு, மாடலிங் என திரைத்துறையில் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். உலக மருத்துவர் தினமான இன்று, தென்னிந்திய சினிமாவில் டாக்டருக்கு படித்துள்ள முக்கிய நடிகைகள் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சாய் பல்லவி
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/05/09/ZaaDR9TuHgW5wJoVB0ce.jpg)
தென்னிந்திய சினிமாவின் நட்சத்திரங் ஒருவரான சாய் பல்லவி, 2016 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் உள்ள திபிலிசி மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (Tbilisi State Medical University) தனது மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். மருத்துவம் போன்ற ஒரு கடினமான துறையில் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும், அவர் இந்தியாவின் மருத்துவராகப் பதிவு செய்யவில்லை. ஆனாலும், மருத்துவத் துறையுடனான தனது தொடர்பை அவர் ஒருபோதும் கைவிட்டது இல்லை.
தற்போது சாய் பல்லவியின் முழு கவனமும் நடிப்பில்தான் உள்ளது. 'பிரேமம்' திரைப்படத்தில் மலர் டீச்சராக அறிமுகமாகி, இன்று தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். தனது தேர்ந்த நடிப்பாலும், இயல்பான அழகாலும், எந்தவித ஒப்பனையும் இல்லாமல் தோன்றும் துணிச்சலாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
ஸ்ரீலீலா
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2024/12/18/screenshot-2024-12-18-155757.png)
தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வரும் ஸ்ரீலீலா, எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற ஒரு மருத்துவர். இந்த நட்சத்திரத்தின் பயணம் கர்நாடக சினிமாவில் தொடங்கியது. ஆனால், அவரது தாயார் ஒரு புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவர் என்பது பலருக்கும் தெரியாத ஒரு சுவாரஸ்யமான தகவல். தாயின் அர்ப்பணிப்பும், மருத்துவ சேவை மீதான ஈடுபாடும் ஸ்ரீலீலாவை வெகுவாக கவர்ந்தது. அதன் விளைவாக, அவரும் மருத்துவப் படிப்பைத் தேர்வு செய்தார். 2021 ஆம் ஆண்டில், ஸ்ரீலீலா தனது மருத்துவப் பட்டத்தை (MBBS) வெற்றிகரமாக நிறைவு செய்தார். தற்போது தமிழில் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார்.
அதிதி சங்கர்
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/8zmRaBxPUDKp5vc1vuTe.jpg)
கார்த்தி நடித்த விருமன் படத்தின் மூலம் பாடகி மற்றும் நடிகையாக அறிமுகமான அதிதி சங்கர், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள். அடிப்படையில் மருத்துவம் படித்துள்ள இவர், சினிமாவின் மீதுள்ள ஆசையில் நடிக்க வந்துள்ளார். மருத்துவப் படிப்பை முடித்த பின்னர், சினிமா வாய்ப்புகள் வந்ததை தொடர்ந்து, 'விருமன்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்திருந்த இவர் தற்போது பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
ஷிவானி ராஜசேகர்
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/01/18/2FMx99qrnUGXfvwMaPv5.jpg)
தமிழகத்தில் பிறந்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் டாக்டர் ராஜசேகரின் மகள் தான் ஷிவானி ராஜசேகர். தமிழில் அன்பறிவு, நெஞ்சுக்கு நீதி ஆகிய படங்களில் நடித்துள்ள இவர் அடிப்படையில் ஒரு மருத்துவர். ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவக் கல்லூரியில் (Apollo Medical College, Hyderabad) மருத்துவப் பட்டம் பெற்றவர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வரும் ஷிவானி, தனது முதல் படத்திலேயே தனது நடிப்புத் திறமையை நிரூபித்தவர், தான் தேர்வு செய்த மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வருகிறார்.
மீனாட்சி செளத்ரி
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/04/28/MkSvPCnDs3jTTIM3XBs1.jpg)
விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மீனாட்சி சௌத்ரி, அடுத்து ஆா.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்திருந்தார். விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான தி கிரேட்டஸ்ட் ஆ.ஃப் ஆல் டைம் என்ற படத்தில் வில்லன் விஜய்க்கு ஜோடியடிக பிரஷாந்தின் மகளாக நடித்திருந்த மீனாட்சி சௌத்ரி, அடிப்படையில் ஒரு பல் மருத்துவர் ஆவார். 2018-ம் ஆண்டு மிஸ் கிராண்ட் இந்தியா பட்டம் வென்ற மீனாட்சி சௌத்ரி பல் அறுவை சிகிச்சை நிபுணரும் ஆவார்.
ஹரியானாவைச் சேர்ந்த மீனாட்சி, தனது மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, அழகுப் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் அவர் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றெடுத்துள்ளார். அவரது முதல் படங்களிலேயே தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார்.