வீரம் படத்தில் அஜித்துடன் நடித்த சிறுமி: இளம் வயது தேவயானியாக நடித்தவர் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?

கடந்த 2014-ம் ஆணடு வெளியான அஜித்தின் வீரம் படத்தில் தமன்னாவின் அண்ணன் மகள் நாசரின் பேத்தியாக நடித்திருந்தார், இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், யுவினா பார்த்தவி ரசிகர்கள் மனதை கவர்ந்த குழந்தை நட்சத்திரமாக மாறினார்.

கடந்த 2014-ம் ஆணடு வெளியான அஜித்தின் வீரம் படத்தில் தமன்னாவின் அண்ணன் மகள் நாசரின் பேத்தியாக நடித்திருந்தார், இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், யுவினா பார்த்தவி ரசிகர்கள் மனதை கவர்ந்த குழந்தை நட்சத்திரமாக மாறினார்.

author-image
WebDesk
New Update
Yuvini Parthavi

அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த சிறுமி, தற்போது வளர்ந்துவிட்ட நிலையில், புதிய படத்தில் அவர் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் கவனம் ஈர்த்துள்ளது.

Advertisment

ராஜகுமாரன் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான திருமதி தமிழ் என்ற படத்தில் இளம் வயது தேவயான கேரக்டரில் நடித்தவர் நடிகை யுவினா பார்த்தவி. தொடர்ந்து இவன் வேற மாதிரி படத்தில், நாயகியின் சிறுவயது கேரக்டரில் நடித்திருந்த இவர், கடந்த 2014-ம் ஆணடு வெளியான அஜித்தின் வீரம் படத்தில் தமன்னாவின் அண்ணன் மகள் நாசரின் பேத்தியாக நடித்திருந்தார், இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில், யுவினா பார்த்தவி ரசிகர்கள் மனதை கவர்ந்த குழந்தை நட்சத்திரமாக மாறினார்.

தொடர்ந்து மஞ்சப்பை, அரண்மனை, கத்தி, காக்கிச்சட்டை, ஸ்ராபெரி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்திருந்த யுவினா பார்த்தவி கடநத ஆண்டு வெளியான ஜெயம்ரவியின் சைரன் படத்தில் அவரின் மகளாக நடித்திருந்தார். தற்போது நடிகையாக மாறியுள்ள இவர் முதல் படமாக ரைட் என்ற படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில், நேற்று (செப்டம்பர் 20) சென்னையில் நடைபெற்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், அஜித்துடன் நடித்தது குறித்து யுவினா பார்த்தவி பேசியுள்ளார்.

சமீபத்தில் அஜித்திடம், பேசினாரா என்று யுவினா பார்த்தவியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த யுவினா பார்த்தவி, "நான் வீரம் படத்தில் அஜித் சாருடன் பணிபுரிந்தேன், அன்றிலிருந்து அந்தக் கதாபாத்திரத்திற்காக எனக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்து வருகின்றன, அது எனக்கு மிகவும் உதவியது. ஆனால் அஜித் சார் ஒரு பிஸியான நபர், அதனால் எனக்கு அவருடன் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் நான் பேசினால் நிச்சயமாக அவருடன் பேசுவேன்" என்றார்.

Advertisment
Advertisements

சிவா இயக்கிய வீரம் படத்தில் தமன்னா நடித்தார், அவர்களுடன் விதார்த், பாலா, சந்தானம், நாசர், பிரதீப் ராவத் மற்றும் அதுல் குல்கர்னி உள்ளிட்ட துணை நடிகர்களும் நடித்தனர். தற்போது சுப்பிரமணியன் ரமேஷ்குமார் இயக்கிய ரைட் படத்தில் அருண் பாண்டியன், நட்டி ஏகே நடராஜன், அக்ஷரா ரெட்டி மற்றும் ரோஷன் சுபாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஆதித்யா ஷிவாக், யுவினா பார்த்தவி, வினோதினி, ரோஷன், மூனர் ரமேஷ், தங்கதுரை, உதய் மகேஷ் மற்றும் முத்துராமன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், யுவினா பார்த்தவி கடைசியாக ஆண்டனி பாக்யராஜின் சைரன் படத்தில் ரவி மோகனின் மகளாக நடித்திருந்தார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்த இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, அழகம் பெருமாள், சமுத்திரக்கனி மற்றும் அஜய் ஆகியோரும் நடித்துள்ளனர்.

Actor Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: