எப்படி இவ்ளோ அழகா இருக்கீங்க! அதிதி ராவ் மஞ்சள் போட்டோஸ் வைரல்

இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய அதிதி ராவ் 10 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் காற்று வெளியிடை படத்தில் நடித்திருந்தார்.

இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய அதிதி ராவ் 10 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் காற்று வெளியிடை படத்தில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Aditi Rao

காற்று வெளியிடை நாயகி அதிதி ராவ் ஹைதிரி

2006-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ப்ரஜபதி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதிரி. தொடர்ந்து 2007-ம் ஆண்டு தமிழில் வெளியான சிருங்காரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Advertisment
publive-image

டெல்லி 6 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமான அதிதி ராவ், தொடர்ந்து பல இந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். அதன்பிறகு 10 வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் காற்று வெளியிடை படத்தில் நடித்திருந்தார்.

publive-image
Advertisment
Advertisements

கார்த்தி நாயகனாக நடித்த இந்த படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

publive-image

ஆனால் அடுத்து மணிரத்னம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் அதிதி அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் வரவேற்பை பெற்றிருந்தாலும் அதிதிக்கு கை கொடுக்கவில்லை.

publive-image

அதனைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் நடித்திருந்த அதிதி, கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ஹே செனாமிகா என்ற படத்தில் தமிழில் நடித்திருந்தார்.

publive-image

தற்போது காந்தி டாக்கீஸ் என்ற சைலண்ட் படத்தில் நடித்து வரும் அதிதி ராவ், லைனஸ் என்ற ஆங்கில படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், அதிதிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அதிதி ராவ் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இதில் அவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது வழக்கம்.

publive-image

அந்த வகையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற அதிதி ராவ் அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Aditi Rao Hydari

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: