லியோ டிக்கெட் முன்பதிவு: அறிவித்த தேதிக்கு முன்னதாக திடீர் தொடக்கம்

லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

author-image
WebDesk
New Update
leo vijay

லியோ படத்தில் விஜய்

தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், படத்தின் டிக்கெட் முன்பதிவு வரும் அக்டோபர் 15-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 2 நாட்கள் முன்னதாகவே முன்பதிவு தொடங்கியுள்ளது

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்துள்ள லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளர். இப்படத்தில் த்ரிஷாசஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள நிலையில், முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளர்.

படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இதனிடையே அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள லியோ படத்திற்கு 5 நாட்கள் தினமும் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

ஆனாலும் படம் அதிகாலை காட்சி திரையிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கும் என்றும், இரவு 1.30 மணிவரை காட்சிகளை திரையிடலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது, அதிகாலை காட்சி கிடைக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனிடையே லியோ படத்தின் டிக்கெட் முன்பதி வெளிநாடுகளில் பெரும் வசூல் சாதனை படைத்து வரும் நிலையில், தமிழகத்தில் எப்போது முன்பதிவு தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

இந்நிலையில், தற்போது லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு வரும் அக்டோபர் 15-ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2 நாட்களுக்கு முன்னதாக இன்றே லியோ படத்தின் முன்பதிவு தொடங்கியுள்ளது. வெளிநாடுகளில் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கப்பட்ட லியோ படத்தின் முன்பதிவு, ஜெயிலர் படத்தின் முன்பதிவு வசூலை முறியடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்காவில் சாதனை படைத்துள்ளது.  

இதனிடையே உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ படத்தின் முன்பதிவு தமிழகத்தில் இன்று தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் படத்திற்கு கிடைத்துள்ள மமோக வரவேற்பு மற்றும் முன்பதிவு வசூலை பொறுத்து தமிழகத்தில் படத்திற்கு அதிகாலை காட்சி திரையிட தமிழக அரசிடம் தயாரிப்பாளர்கள் கோரிக்கை வைத்தனர். இதில் காலை 4 மணி மற்றும் காலை 7 மணி காட்சி காட்சிகள் வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில்,  தமிழக அரசு காலை 9 மணிக்கே காட்சிகள் திரையிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: