சமந்தாவை பார்த்துக்கொண்ட தாய்
கணவரை விவாகரத்து செய்துவிட்ட சமந்தா படங்களில பிசியாக நடித்து வந்த நிலையில், ஹைதரபாத்தில் வீடு வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இதனிடையே சமீப காலமாக சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா இதற்காக தனியாக சிகிச்சை பெற்று வருகிறார். கணவரிடம் விவாகரத்து பெற்றுவிட்டதால் தனிமையில் இருந்த சமந்தாவை அவரது அம்மா சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்று தனது மகளை கவனித்துக்கொண்டு வருகிறார்.
மீண்டும் இணைகிறதா வாரிசு கூட்டணி?
பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான படம் வாரிசு. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிய இந்த படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், நேற்று வாரிசு 300 கோடியை தொட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே விஜய் தில் ராஜூ வம்சி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. தற்போது விஜய் தளபதி 67 படத்தில் நடித்து வரும் நிலையில், தளபதி 68 படத்தை அட்லி இயக்க உள்ளதாகவும், தளபதி 69 படத்தில் மீண்டும் இந்த கூட்டணி இணையும் என்று கூறப்படுகிறது.
இந்திய வரைபடத்தை மதிக்காத அக்ஷைய் குமார்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான அக்ஷைய் குமார் தற்போது செல்பி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில், அக்ஷைய் குமார் இந்திய வரைபடத்தில் நடப்பது போன்ற காட்சி உள்ளது. இந்த காட்சிக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திரைப்பட தாயாரிப்பாளர் மரணம்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஹேம் நாக் பாபுஜி உடல்நலக்குறைபாடு காரணமாக மரணமடைந்தார். ரஜினி நடித்த காளி, கர்ஜனை உள்ளிட்ட படங்களை தயாரித்த நாக பாபுஜி மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட சென்னை 2ம் பாகம் குறித்த அப்டேட்
தனுஷ் நடிப்பில் தற்போது வாத்தி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது பேசிய தனுஷ், அனைவரும் வட சென்னை 2 படம் வருமா என்று கேட்கிறார்கள். அதை இயக்குனர் வெற்றிமாறனிடம் தான் கேட்க வேண்டும். ஆனாலும் வட சென்னை 2 நிச்சயமாக வரும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“