பாகுபலி நடிகருக்கு நிச்சயம் முடிந்ததா?
பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நடிகர் பிரபாஸ் அடுத்து ஒரு பெரிய வெற்றிக்காக போராடி வருகிறார். பாகுபலி படத்திற்கு பிறகு அவர் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகாத நிலையில், தற்போது அதிபுருஷ், கே.ஜி.எஃப் இயக்குனரின் சலார் உள்ளிட்ட படங்களின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். இதனிடையே நடிகர் பிரபாஸ்க்கும், நடிகை கீர்த்தி சனோகானுக்கும் மாலத்தீவில் நிச்சயம் முடிந்துவிட்டதாக பிரபல பத்திரிக்கையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தளபதி 67-ல் த்ரிஷா விலகிவிடடாரா?
விஜய் – லோகேஷ் கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ள படம் லியோ. இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படக்குழுவுடன் காஷ்மீர் சென்ற நடிகை த்ரிஷா திடீரென அங்கிருந்து திரும்பிவிட்டதாக தகவல் வெளியானது. இதனால் விஜய் படத்தில் இருந்து த்ரிஷா விலகிவிட்டாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், இந்த தகவல் உண்மையில்லை. மற்ற நடிகர்களின் காட்சி தொடர்பான படப்பிடிப்புகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
வாரிசு படத்தை மீண்டும் விமர்சித்த ப்ளு சட்டை மாறன்
விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படம் வாரிசு கலவையாக விமர்சனங்களை பெற்றாலும் வாரசு படம் வசூலில் சாதனை படைத்து வருவதாக அறிவித்து வரும் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வாரிசு படம் 300 கோடியை வசூல் செய்துள்ளதாக அறிவித்தது. இந்த பதிவை கிண்டல் செய்யும் விதமாக பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டைமாறன், 300 கோடி உலக மகா உருட்டு என்று பதிவிட்டுள்ளார்.
முழங்கால் வலியால் அவதிப்படும் அருண்விஜய்
பரபல நடிகர் அருண் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார் வித்தியாசமான கதைகளத்தை தேர்வு செய்து நடித்து வரும் அருண்விஜய் தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் நடித்தபோது அருண்விஜய்க்கு அடிபட்டதாகவும் அதனால் ஏற்பட்ட முழங்கால் வலிக்கு தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
மீண்டும் மங்காத்தா இயக்குனருடன் நகர் அஜித்குமார்
துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. லைகா நிறுவனம் இந்த படத்தை தாயாரிப்பதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு மகிழ் திருமேனி அஜித் படத்தை இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நடிகர் அஜித் தற்போது மீண்டும் மங்காத்தா இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கதை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“