New Update
/
சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் கையில் கட்டுடன் வந்ததால், அதிர்ச்சியான ரசிகர்கள் இது குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதற்கான விளக்கம் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துள்ள ஐஸ்வர்யா ராய், தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். உலக அழகிககள் எத்தனை பேர் வந்தாலும், தமிழ்நாட்டுக்கு ஐஸ்வர்யா ராய் தான் உலக அழகி என்று சொல்லும் அளவுக்கு அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் அதிகம். 1997-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய்.
தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் நடித்த ஐஸ்வர்யா, அதன்பிறகு இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தெலுங்கு மற்றும் பெங்காலி மொழி படங்களிலும் நடித்துள்ள ஐஸ்வர்ய ராய், கடந்த 2007-ம் ஆண்டு அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2018-ம் ஆண்டு ஃபன்னி கான் என்ற படத்தில் நடித்த 4 ஆண்டு இடைவெளிக்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.
படங்களில் நடிக்கவில்லை என்றாலும், பொது நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்கும் ஐஸ்வர்யா ராய், சமீபத்தில் ப்ரான்ஸ் நாட்டில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றிருந்தார். இந்த முறை அவர் கையில் கட்டுடன் வந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு விபத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், கேன்ஸ் திரைப்பட விழாவை முடித்துக்கொண்டு அவர் மும்பை திரும்பியவுடன் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.