/indian-express-tamil/media/media_files/2025/08/20/ajith-miratta-2025-08-20-21-26-36.jpg)
இன்றைய காலக்கட்டத்தில் சினிமாவில் சிக்ஸ்பேக் வைத்தால் தான் ஹீரோ என்று ஒப்புக்கொள்வார்கள். அந்த அளவிற்கு தங்கள் திரையில் பார்க்கும் நடிகர்கள் ஃபிட்னஸாக இருக்க வேண்டும் என்ற ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இதற்கு அடித்தளம் போட்டது நடிகர் அஜித் தான் என்று இயக்கனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
கடந்த 2001-ம் ஆண்டு வெளியான தீனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பிறகு விஜயகாந்த் நடிப்பில், ரமணா என்ற மெகாஹிட் படத்தை கொடுத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். இதன் பிறகு 3-வது படமாக முருகதாஸ் இயக்கியது கஜினி. கடந்த 2005-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில், சூர்யா, அசின், நயன்தாரா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சூர்யாவின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக கஜினி இன்றுவரை நிலைத்திருக்கிறது.
அதே சமயம் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகர் அஜித் தான். சூர்யாவுக்கு முன்பாக சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தில் அஜித் நடித்து 2 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அப்போது படத்திற்கு 'மிரட்டல்' என்று டைட்டில் வைத்துள்ளனர். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால், இந்த படத்தில் இருந்து அஜித் விலகியதை தொடர்ந்து அந்த வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்துள்ளது. அஜித் விலகியதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லாத நிலையில், சமீபத்தில் இப்படத்தில் இருந்து அஜித் விலகியதற்காக காரணம் குறித்து இயக்குநர் முருகதாஸ் கூறியுள்ளார்.
வலைப்பேச்சு வாய்ஸ் சேனலுக்கு அவா அளித்த பேட்டியில், "தீனா படம் முடிந்ததும் தீனா 2 படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்தது. அதன்பின் அஜித் சார் கும்பகோணத்தில் ஜீ படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது அவரை சந்தித்து கஜினி படத்தின் கதையை சொன்னேன். கதை கேட்ட அஜித் இந்த படத்தில் நடிக்கும் ஹீயோயினுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லி, இந்த படத்திற்காக அவர் சிக்ஸ் பேக் வைப்பதாக சொன்னார். அன்றைய சூழலில் யாரும் சிக்ஸ் பேக் வைத்ததில்லை. அப்போது ஒரே நேரத்தில் அட்டகாசம் , நான் கடவுள் ஆகிய படங்களில் அஜித் நடிக்க இருந்தார்.
"#Mirattal film was later on changed as #Ghajini & still I have that Footage of #Ajithkumar sir🤩. AK was the one who told me Six pack concept for this film🏋️♂️. Later on I told Six pack concept to #Suriya & #AamirKhan for Ghajini, it helped me lot♥️"
— AmuthaBharathi (@CinemaWithAB) August 19, 2025
- ARM pic.twitter.com/yy0nv31A6Q
இதில். நான் கடவுள் படத்தில் அவர் நீண்ட தலைமுடி வளர்க்க வேண்டும் இந்த படத்தில் மொட்டையாக இருக்க வேண்டும் என்பதால், இந்த படத்தை எங்களால் எடுக்க முடியவில்லை. அஜித் சார் சொன்ன பிறகு தான் இந் கதை குறித்து சூர்யாவிடம் பேசுமபோது சூர்யாவுக்கு சிக்ஸ் பேக் வைக்க முடிவு செய்தேன். இந்தியில் ஆமீர் கான் நடித்தபோதும் சிக்ஸ் பேக் வைக்க சொன்னேன். அஜித் சார் சஞ்சய் ராமசாமியாக நடித்த இரண்டு நாள் காட்சிகள் இன்னும் என்னிடம் இருக்கின்றன. அதை எல்லாம் இப்போது பார்த்தாலும் பிரம்மிப்பாக இருக்கிறது" என ஏ. ஆர் முருகதாஸ் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.