அஜித் பிறந்த நாளை முன்னிட்டு தீனா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தை பார்க்க வந்த ஒரு ரசிகர் விஜயின் கில்லி பட போஸ்டரை கிழித்துள்ளார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கில்லி போஸ்டரை கிழித்ததற்காக மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் புதிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பழைய படங்கள ரீ-ரிலீஸ் செய்வது தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி விஜயின் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வசூலில் மாஸ் காட்சிய நிலையில், இதுவரை ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்களில் வசூலை முறியடித்து புதிய சாதனை படைத்து வருகிறது.
இதனிடையே உழைப்பாளர் தினமான இன்று நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 2001-ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அஜித் நடிப்பில் வெளியான பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக தீனா படம், அவருக்கு தல என்ற புதிய அடையாளத்தை கொடுத்தது. இதனால் அஜித்தின் திரை வாழ்க்கையில் தீனா ஒரு முக்கிய படமாக கருதப்படுகிறது.
இந்நிலையில், அஜித் பிறந்த நாளை விமர்சையாக கொண்டாடி வந்த ரசிகர்கள், தீனா படத்தின் ரீ-ரிலீ்ஸ் பார்க்க தியேட்டர்களை நோக்கி படையெடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை காசி திரையரங்கில் தீனா படம் பார்க்க சென்ற அஜித் ரசிகர் ஒருவர், அருகில் இருந்த விஜயின் கில்லி பட போஸ்டரை தனது பைக் சாவியை வைத்து கிழித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இது தொடர்பான காவல்துறையினர் அவரை கைது செய்தனர். தற்போது ஜாமீனில் விடுதலையாகி வந்துள்ள அவர், விஜயின் கில்லி பட போஸ்டரை கிழித்தது தவறு தான். இனிமேல் இப்படி செய்ய மாட்டேன். இந்த சம்பவம் தொடர்பான விஜயின் தமிழக வெற்றிகழகம் கட்சினர் மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“