ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின், டிஜிட்டல் உரிமைம் பெரிய தொகைக்கு விலை போயுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துணி படத்திற்கு பிறகு நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. த்ரிஷா அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது சில தவிர்க்க முடியாத காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே விடா முயற்சி படம் பாதியில் நின்றதால், அடுத்த படத்தில் கமிட் ஆன அஜித், குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். மார்க் ஆண்டனி என்ற படத்தின் மூலம் பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஆந்திராவில் தொடங்கப்பட்டது. மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ரசிகர்கள் மத்தியில் கலவையாக விமர்சனங்களை பெற்று வருகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித் 3 கெட்டப்பில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இதனிடையே குட் பேட் அக்லி படத்தில் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ95 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் உரிமத்தில் அஜித் படம் பெரிய தொகைக்கு வாங்கப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடா முயற்சி படத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரிய விலை கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“