சின்னத்திரை சீரியல்களில் அவ்வப்போது திரைப்பட காட்சிகள் இடம்பெறுவது வழக்கமாகி வரும் நிலையில், தற்போது சன்டிவியின் கயல் சீரியலில், அஜித் படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது குறித்து ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
Advertisment
தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியல்களில் ஒன்று கயல். சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியல் சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது. பொதுவாக இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த சீரியல்களுக்கு தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல தரப்பினரும் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
இதன் காரணமாக வெள்ளித்திரையை விட சின்னத்திரை சீரியல்கள் கவனம் ஈர்த்து வரும் நிலையில், திரைப்பட நடிகைகளை விடவும், சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பை கொடுத்து வருகின்றனர். இதனால் அவ்வப்போது புதிய சீரியல்கள் ஒளிபரப்பாவதும், பழைய சீரியல்களில் திரைக்கதையை சுவாரஸ்யமாக மாற்றுவதும், சீரியல் மகாசங்கமம் உள்ளிட்ட பல முயற்சிகளில் சின்னத்திரை வட்டாரங்கள் ஈடுபட்டு வருகின்றன.
அதேபோல் புதிதாக சீரியல்கள் என்ட்ரி ஆகும்போது, ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும் வகையில் ஹிட் அடித்த தமிழ் திரைப்படங்களின் பெயர்களை வைப்பது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் வெளியான, சின்னத்தம்பி, ராஜா ராணி, பாரதி கண்ணம்மா, வானத்தைபோல, கயல் என வெற்றி பெற்ற திரைப்படங்களின் பெயர்களில் வந்த சீரியல்களும் ஹிட் அடித்துள்ளது. படங்களின் தலைப்பு மட்டுமல்லாமல் காட்சிகளையும் தற்போது சின்னத்திரை சீரியல்கள் காப்பியடிக்க தொடங்கியுள்ளன.
Advertisment
Advertisement
அந்த வகையில் சன்டிவியின் கயல் சீரியலில் அஜித் த்ரிஷா நடிப்பில் வெளியாக கிரீடம் படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அஜித்தும் – த்ரிஷாவும் தண்ணீர் தொட்டியில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதும், அவர்கள் பேசுவதை குடும்பத்தினர் அனைவரும் கேட்டுக்கொண்டு இறுதியாக அவர்கள் நனைவும் கையில் தொட்டிக்குள் தண்ணீர் விடுவது மாதிரியாக காட்சி தற்போது கயல் சீரியலில் இடம் பெற்றுள்ளது.
ஏற்கனவே வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘’மேகம் கருக்காதோ பெண்ணே பெண்ணே’’ என்ற பாடலுக்கு சைத்ரா ரெட்டியும், சஞ்சீவ் கார்த்தியும் நடனம் ஆடுவது போல் காட்சியில் இருந்த நிலையில், தற்போது அஜித்தின் கிரீடம் படத்தை காப்பி அடித்துள்ளனர். இந்த காட்சிகளை ஏற்கனவே திரையில் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு சீரியல்களில் பார்க்கும்போது சலிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“