scorecardresearch

ஏ.கே. 62 முதல் சந்திரமுகி 2 வரை… முக்கிய தமிழ்ப் படங்களை கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்

முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றுவதில் ஒடிடி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது

ஏ.கே. 62 முதல் சந்திரமுகி 2 வரை… முக்கிய தமிழ்ப் படங்களை கைப்பற்றிய நெட்ஃபிளிக்ஸ்

துணிவு படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள ஏ.கே 62 படம் உட்பட சில முன்னணி நடிகர்களின் ஒடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் ஒடிடி தளங்கள் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அப்போது தியேட்டர்கள் திறக்கப்படாததால் பல படங்கள் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியது. தற்போது கொரோனா சகஜ நிலைக்கு திரும்பி விட்ட நிலையில், தியேட்டரில் வெளியாகும் படங்கள் ஒரு மாதத்தில் ஒடிடி தளத்தில் வெளியாகி வருகிறது.

இதில் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றுவதில் ஒடிடி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் முன்னணி ஒடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் தற்போது தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களை கைப்பற்றியுள்ளது. இதில் அஜித் குமார் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் ஏ.கே. 62 படத்தின் ஒடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பு விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்கள் காமெடியை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த நிலையில் ஏ.கே. 62 படமும் இதே பாணியில் தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

“சில்லா சில்லாவாக (துணிவு)இருக்க முயற்சித்தோம் ஆனால் எங்களால் முடியவில்லை. தற்போது ஏ.கே. 62 (#AK62)  படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் பெற்றுள்ளது என்று என்று நெட்ஃபிளிக்ஸ் இந்தியா சவுத் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஏ.கே.62 படத்தை தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸுடன் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பல திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ஏ.கே.62 தவிர, சந்திரமுகி 2 மற்றும் லைகா நிறுவனம் தயாரிக்கும் மேலும் 3 படங்களின் ஒடிடி உரிமையையும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதில் குறிப்பாக தனுஷின் வாத்தி மற்றும் விக்ரமின் தங்கலான் ஆகிய படங்களும் அடங்கும். தமிழ்-தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் வாத்தி திரைப்படத்தைவெங்கி அட்லூரி எழுதி இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 17ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில், தங்கலான் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஒரு பெரிய பட்ஜெட் பீரியட் படமாக தயாராகி வருகிறது.

மேலும் இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானவுடன் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திரைப்படத் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் நடிகர் கார்த்தியின் ஜப்பான் ஆகிய திரைப்படங்கள் திரையரங்கில் வெளியான பிறகு நெட்ஃபிளிக்ஸில் வெளியாக உள்ளது.

மேலும் ஆரியன், இறைவன், இருகபற்று, ரிவால்வர் ரீட்டா, தலைக்கூத்தை, வரலாறு முக்கியம் ஆகியவையும் நெட்ஃபிளிக்ஸ் வாங்கிய வரவிருக்கும் படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema ajith kumar ak62 to dhanushs vaathi list of upcoming tamil films acquired by netflix

Best of Express