scorecardresearch

துணிவு ப்ரமோஷனுக்கு வருகிறாரா அஜித்? வைரலாகும் ட்விட்டர் பதிவு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளார்.

துணிவு ப்ரமோஷனுக்கு வருகிறாரா அஜித்? வைரலாகும் ட்விட்டர் பதிவு

சில ஆண்டுகளாக தனது படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத நடிகர் அஜித்குமார் துணிவு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து அஜித் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித், அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்துள்ள நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தில் உள்ளார். இவரது படங்கள் வெளியாகும்போது, ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடுவது வழக்கம். மேலும் ரசிகர்கள் மன்றம் வைத்துக்கொள்வது, அடைமொழி வைத்துக்கொள்வது, வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என அனைத்திலும் இருந்து அஜித் சற்று விலகியே உள்ளார்.

அதோடு மட்டுமல்லாமல் தனது படத்தின் பரமோஷன் நிகழ்ச்சிக்கு கூட அவர் வருவதில்லை. ஆனாலும் அவரது படங்கள் வசூலில் சாதனை படைக்கவும் தவறியில்லை என்று சொல்லலாம். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பெரிய வசூலி சாதனை நிகழ்த்தியது தமிழ் சினிமா வட்டாரம் அறிந்த ஒரு தகவல்.

வலிமை படத்திற்கு பிறகு தற்போது மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச.வினோத் இயக்கத்தில் அஜித் துணிவு என்ற படத்தில் நடித்துள்ளார். அஜித் இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்து வருகின்றனர். படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதனிடையே தனது படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத அஜித் துணிவு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் இது தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் உண்மையில்லை என்று அஜித் தற்போது தனது மேலாளர் மூலம் உறுதி செய்துள்ளார்.

தற்போது நடிகர் அஜித் தரப்பில் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஒரு நல்ல படத்திற்கு அந்த படமே பெரிய விளம்பரம் நிபந்தனையற்ற அன்பு – அஜித் என்று பதிவிட்டுள்ளார்.

அஜித் படத்தின் ப்ரமோஷனுக்கு வரவில்லை என்றாலும் அவரது படங்கள் மாஸ் ஓப்பனிங்கை பெற என்றுமே தவறியதில்லை. அதேபோல் ரஜினி விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தங்களது ப்ரமோஷன்களை கொடுத்து விடுகிறார். ஆனால் அஜித் அப்படி இல்லை. தான் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை தவிர மற்ற எதிலும் அஜித்தை பார்க்கவே முடியாது என்று சொல்லலாம்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema ajith kumar refutes rumours about promoting thunivu

Best of Express