அஜித்தின் வலிமை டிரெய்லர் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்

Tamil CInema Update : நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் மாஸான டிரெய்லர் வெளியாகி உள்ளது. வலிமை படத்தின் மாஸ் டிரெய்லரை அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Valimai Movie Trailer Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார்,  நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடித்துள்ள படம் வலிமை. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித் ஜோடியாக ஹீமா குரோஷி,  வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, யோகி பாபு, அச்யுத்குமார், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தில் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கடந்த 2019-ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 8-ந் தேதி வெளியான நேர்கொண்ட பார்வை படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தியில் அமிதாப் பச்சன் டாப்சி நடிப்பில் வெளியான பின்க் படத்தில் ரீமேக்கான இந்த படம் வசூலில் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத். நடிகர் அஜித் குமார் தயாரிப்பாளர் போனி கபூர் 2-வது முறையாக இணைந்துள்ள படம் வலிமை.

கடந்த 2019-ம் ஆண்டு இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு வலிமை படம் தொடர்பான தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எவ்வித அப்டேட்டும் வழங்கப்படவில்லை. இதனால் கோபமான ரசிகர்கள், கிரிக்கெட் கிரவுண்ட், அரசியல் மாநாடு, சமூக வலைதளங்ள் என அனைத்து இடங்களிலும் வலிமை அப்டேட் கேட்டு கொடி பிடிக்க தொடங்கினர். ஆனாலும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், தயாரிப்பாளர் போனி கபூரிடம் நேரடியாக விசாரிக்க தொடங்கிவிடடனர்.  

அதன்பிறகு ஒரு வழியாக வலிமை வலிமை படத்தின் மோஷன்போஸ்டர் வெளியிடப்பட்டது. அதனைத் தொடந்து மேக்கிங் வீடியோ, 2 பாடல்கள் என வரிசையாக வலிமை அப்டேட் வழங்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு எவ்வித அறிவிப்பும் இன்றி வலிமை படத்தில் விசில் தீம் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இந்த தீம் தற்போது பலரின் மொமைல் ரிங்டேனாக உள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. வியாழக்கிழமை செண்டிமெண்ட் வைத்துள்ள நடிகர் அஜித் குமார் சமீப காலமாக தனது படம் குறித்து அப்டேட்டுகளை வியாழன் கிழமைகளில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது வலிமை படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 13-ந் தேதி வெளியாக உளளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் மாஸான டிரெய்லர் பைக் சேசிங் சண்டை காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது. வலிமை டிரெய்லரை அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் கொண்டாடி வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema ajith kumar valimai trailer update in tamil

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express