அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், படம் இந்த படம் எப்போது வெளியாகும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். த்ரிஷா அர்ஜூன், ஆரவ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ஜனவரி மாத இறுதியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான விடா முயற்சி திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
விடா முயற்சி படத்தை தொடர்ந்து அஜித், குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்து வருகிறார். மார்க் ஆண்டனி என்ற படத்தின் மூலம் பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ரசிகர்கள் மத்தியில் கலவையாக விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் அஜித் 3 கெட்டப்பில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 10-ந் தேதி குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் இட்லி கடை திரைப்படமும் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ் புத்தாண்டு தினத்தில், தனுஷ் – அஜித் நேரடியாக மோதும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸ் அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனுஷ் படமும் அதே தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், கடைசி நேரத்தில் மாற்றம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“