Advertisment

Thunivu Box Office Collection: 2-ம் நாள் நிலவரப்படி துணிவு கலெக்ஷன் இத்தனை கோடி!

படங்களும் தமிழகத்தில் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியானது, ஆனால் வாரிசு படம் தெலுங்கு மாநிலங்களில் மூன்று நாட்கள் (ஜனவரி 14) தாமதமாதமாக வெளியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
Thunivu Box Office Collection: 2-ம் நாள் நிலவரப்படி துணிவு கலெக்ஷன் இத்தனை கோடி!

எச்.வினோத் அஜித் கூட்டணியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான துணிவு படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் இரு பெரும் நடிகர்களாக வலம் வரும் விஜய் அஜித் இருவரும் போட்டி நடிகர்களாக பார்க்கப்படுகின்றனர். இவர்களின் படங்கள் தனித்தனியாக வெளியானாலே பரபரப்பாக இருக்கும் ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த வாரிசு அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் (ஜனவரி 11) வெளியாகியுள்ளது.

இதனால் எந்த படம் அதிக வசூல் என்பது குறித்து இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் சில ஆதாரமற்ற தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றனர். இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் வாரிசு படத்தை விட சற்று குறைவான வசூலையே பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இரண்டு படங்களும் தமிழகத்தில் ஒரே நாளில் திரையரங்குகளில் வெளியானது, ஆனால் வாரிசு படம் தெலுங்கு மாநிலங்களில் மூன்று நாட்கள் (ஜனவரி 14) தாமதமாதமாக வெளியாக உள்ளது. இதனிடையெ இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க்கின் கூற்றுப்படி, வாரிசு படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 46.2 கோடி வசூல் செய்துள்ளதாகவும், துணிவு படம் சுமார் ரூ.37.6 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இரண்டாவது நாளில் துனிவு சுமார் ரூ.14.42 கோடி வசூலித்ததாகவும், வாரிசுரூ.17 கோடி முதல் ரூ.19 கோடி வரை வசூல் செய்வதாகவும் ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இரண்டு படங்களையும் ஒப்பிடுகையில், வாரிசு இந்தியாவில் இரண்டே நாளில் ரூ.18 கோடி முதல் ரூ.20 கோடி வரை வசூலித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

எச் வினோத் இயக்கிய, துணிவு படத்தை போனி கபூர் தயாரித்தார், மேலும் தமிழ்நாட்டில் வாரிசு படத்தை விட சற்று அதிகமான திரையரங்குகளில் வாரிசு படம் வெளியானது. இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பவானி ரெட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். துணிவு மற்றும் வாரிசு இரண்டும் நீண்ட பொங்கல் வார இறுதியில் பலன்களை அறுவடை செய்கின்றன.

இருப்பினும், பெரிய மோதல் படங்களின் ஒட்டுமொத்த வசூலை பாதித்துள்ளது. இதுவரை அஜித் மற்றும் விஜய் படத்திற்கான விமர்சனங்கள் பாசிட்டீவாகவே வந்துள்ளது. துணிவு படத்திற்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் 3 ஸ்டார்கள் வழங்கியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment