பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடிப்பில் நேற்று வெளியான துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது துணிவு படம் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொட்ர்ந்து இயக்குனர் எச்.வினோத் அஜித் கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில் மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனவரி 11-ந் தேதி (நேற்று) வெளியான துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் நெகடீவ் ரோலில் நடித்துள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ள துணிவு படம் திரையரங்குகளில் வெளியான சில மணி நேரங்களில் ஆன்லைன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆன்லைனில் லீக் ஆன துணிவு படத்தை நெட்டிசன்கள் பலரும் சமூக ஊடக தளங்கள் மற்றும் தனிப்பட்ட கணக்குகள் மூலம் ஷேர் செய்து வருகின்றனர். இந்த ஆன்லைன் தளங்கள் மூலம் படம் இலவசமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த இணைப்புகள் மூலம் படங்களை பார்ப்பது சினிமா அனுபவம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.
இந்த ஆன்லைன் இணைதளங்களில் இது போன்று படங்கள் வெளியாவது தொடர்பான போலீசார் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் எந்த நடவடிக்கையும் இந்த வகையாக திருட்டு சம்பவங்களை கட்டப்படுத்த முடியவில்லை. அஜித் படத்திற்கே இந்த நிலை என்றால் மற்ற படங்களின் நிலைமையை நினைத்து சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த சட்டவிரோத இணையதளங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படத்துக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக எச் வினோத்தை அஜித்குமார் ஏன் தேர்வு செய்தார் என்பதற்கான பதில் துனிவு படத்தில் உள்ளது. சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று கொடுத்த எச் வினோத் மீண்டும் தனது பாணியில் களமிறங்கியுள்ளார். வலிமையின் தோல்விக்கான காரணம் இப்போது ரசிகர்களால் புரிந்து கொள்ள முடிகிறது. கோவிட் சூழ்நிலை காரணமாக அவருக்கு ஒரு பெரிய அழுத்தம் இருந்தது என்று கூறப்படுகிறது.
சரியான சுதந்திரம் கிடைத்தால் ஒரு நல்ல திரைப்பட இயக்குனகர் தன்னை நிரூபிப்பார் என்பதை துணிவு மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து எச்.வினோத், உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்க உள்ள நிலையில், இந்த படத்திற்காக ஒட்டுமொத்த திரையுலகமும் இப்போது எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/