Thunivu movie trailer create new record : அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படத்தின் டிரெய்வர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில், தற்போது பல சாதனைகள் புரிந்துள்ளதாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார். சினிமா பின்புலம் இல்லாமல் சினிமாவில் சாதித்த சில நடிகர்களில் முக்கியமானவரான அஜித் நடிப்பில் தயாராகியுள்ள துணிவு படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை போனி கபூர் தயாரித்தள்ளார்.
அஜித்துடன், மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி, அஜய், பிரேம், ஜான் கோக்கைன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனகவே இந்த படத்தின் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படம் குறித்த அப்டேட்கள் அவ்வப்போது வெளியி வருகிறது.அந்த வகையில் கடந்த டிசம்பர் 31-ந் தேதி துணிவு படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
வெளியான சில மணி நேரங்களில் துணிவு படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த டிரெய்வர் அஜித் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக அமைந்துள்ளது. இந்த உற்சாகத்துடன் துணிவு படத்தின் ப்ரமோஷன் பணிகளில் அஜித் ரசிகர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் துணிவு படத்தின் டிரெய்ல் வெளியாகி, ரியல் டைமில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பீஸ்ட படத்தின் டிரெய்வர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களை கடந்த சாதனையை தற்போது துணிவு டிரெய்லர் முறியடித்துள்ளதாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
வங்கி கொள்ளை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள துணிவு படத்தில் அஜித் வித்தியசமான தோற்றத்தில் நடித்துள்ளார். அதேபோல் வில்லத்தனம், காமெடி, டான்ஸ் என டிரெய்லரிலேயே அஜித்தின் வித்தியாசனமா நடிப்பை காட்டியுள்ளனர். இதனால் துணிவு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தாலும், படம் விஜயின் பீஸ்ட் படத்தின் 2-ம் பாகம்போல் உள்ளது என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பீஸ்ட் படம் ஒரு ஷாப்பிங் மாலுக்குள் எடுக்கப்பட்டது போன்று துணிவு ஒரு வங்கியில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறி மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இதற்கு பதிலடி கொடுத்து வரும் அஜித் ரசிகர்கள் துணிவு டிரெய்லரை கொண்டாடி வரும் நிலையில், படத்தின் வெளியீட்டு நாளுக்காக வெயிட் பண்ணுவதாக கூறி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil