மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடா முயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் நிலையில், தற்போது படத்தின் மதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் அஜித்குமார், கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் துணிவு என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். அதன்பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.
அஜித்துடன், அர்ஜூன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், விடா முயற்சி படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த சமயத்தில் அஜித், சமீபத்தில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில். குட் பேட் அக்லி என்ற படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இடையில் விடா முயற்சி படத்தை கையில் எடுத்த லைகா நிறுவனம் தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனால் விடா முயற்சி படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்ற அறிவிப்புடன் கடந்த நவம்பர் 28-ந் தேதி இந்த படத்தின் டீசர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
Advertisment
Advertisement
இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது, விடா முயற்சி படத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. ‘சவதீகா’ என்ற இந்த பாடல் லிரிக்குடன் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“