/tamil-ie/media/media_files/uploads/2022/02/Valimai.jpg)
Tamil Cinema Valimai Juckbox Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிகர் அஜித் இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 2-வது முறையாக இணைந்துள்ள இப்படத்தில் ஹீமா குரோஷி நாயகியாக நடித்துள்ள நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் வெளியிடப்பட்ட நாங்க வேற மாதிரி, மற்றும் தாய் பாசத்தை மையமாக கொண்ட பாடல் என வலிமை படத்தின் எதிர்பார்பர்ப்ப அதிகரிக்கும் வகையில் பாடல்கள் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசர் டிரெய்லர் மற்றும் மேக்கிங் வீடியோக்கள் இணையத்தில் உலாவந்தது. அதனைத் தொடர்ந்து வலிமை திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தபட்டுள்ளதால், வலிமை படம் நாளை (பிப்ரவரி 24) பிரம்மாண்டாக வெளியாக உள்ளது.
Romba naala wait pannittu irundhen 🤩
— 𝑽𝑰𝑪𝑲𝒀 (@psychic_empath_) February 23, 2022
Mother song Tamil ❤️
Sid Sriram voice is very beautiful and emotional
I don't know Tamil but love the song— Manas Kunal (@manaskunal111) February 23, 2022
இந்நிலையில், தற்போது வலிமை படத்தின் ஜாக்பாக்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 15 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோ ரசகர்கள் மத்தியில் வைரலாக பரவி வரும் நிலையில், வலிமை பட வெளியீட்டிற்கு முன்பு இந்த கொண்டாட்டத்தை ரசிகர்களக் தொடங்கியுள்ளனர். மேலும் பாடல் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் படம்வெற்றியடைய வாழ்த்துக்கள் என்றும், நாளை முதல் வலிமை ஆட்டம் ஆரம்பம் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.