படுகாயத்துடன் ஆரவ்... ரிஸ்க்கான கார் சேசிங்கில் அஜித் : விடாமுயற்சி வீடியோ வைரல்

விடா முயற்சி படத்தின் அஜித் நடித்த கார் சேசிங் தொடர்பான ஷூட்டிங் வீடியோ வைரலாகி வருகிறது.

விடா முயற்சி படத்தின் அஜித் நடித்த கார் சேசிங் தொடர்பான ஷூட்டிங் வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Actor ajith New Pic

நடிகர் அஜித் குமார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வந்த விடா முயற்சி திரைப்படத்தின் அதிரடி கார் சேசிங் தொடர்பான ஷீட்டிங் ஸ்பாட் வீடியோவை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment

துணிவு படத்திற்கு பின் நடிகர் அஜித் தற்போது விடா முயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில்அர்ஜூன் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில்மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கி வருகிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது. அப்போது துபாயில் தங்கியிருந்த நடிகர் அஜித் அங்கிருந்து அஜர்பைஜான் சென்று ஷூட்டிங்கில் பங்கேற்று வந்தார். மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அவ்வப்போது புகைப்படங்கள் வெளியாகி வந்த நிலையில், நடிகர் ஆரவ் உள்ளிட்ட சில நடிகருடன் அஜித் குமார் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றிருந்தது. தற்போது தவிர்க்க முடியாத சில காரணங்களால், விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், குட் பேட் அக்லி என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்க்பபட்டது. மேலும் சமீபத்தில், அஜித் பைக் ரைடு சென்ற புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது விடா முயற்சி படத்தில் எடுக்கப்பட்ட கார் சேசிங் தொடர்பான வீடியோவை அஜித்தின் மேனேஜர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

3 வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், அஜித் காரில் படுகாயத்துடன் ஆரவ் அமர்ந்திருக்கும் நிலையில், அவரை வைத்துக்கொண்டு அதிவேகமாக காரை ஓட்டிச்செல்கிறார். இந்த கார் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துவிடுகிறது. இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அஜித் தனது ஆக்ஷன் அவதாரத்தை மீண்டும் நிரூபித்துள்ளார் என்று கூறி வருகின்றனர். இந்த வீடியோ பதிவு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் படமாக்கப்பட்டது என்று அந்த வீடியோவில் சுரேஷ் சந்திரா குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Ajith

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: