Advertisment

விடா முயற்சியை விரைந்து முடிக்கும் லைகா: தீபாவளி ரேஸில் இணைந்த அஜித்; வைரல் அப்டேட்

அஜித் நடித்து வரும் விடா முயற்சி படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது

author-image
WebDesk
New Update
vidamuyarchi

விடா முயற்சி அஜித்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பல தடைகளுக்கு பிறகு, விடா முயற்சி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில், இந்த படத்தை கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியிட லைகா நிறுவனம் களமிறங்கியுள்ளது என்று, தனஞ்சேயன் தெரிவித்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் அஜித்குமார்கடைசியாக கடந்த 2022-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் துணிவு என்ற வெற்றிப்படத்தை கொடுத்தார். அதன்பிறகு இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடா முயற்சி என்ற படத்தில் நடிக்க தொடங்கினார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்று வந்தது.

அஜித்துடன்அர்ஜூன்த்ரிஷாஆரவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில்விடா முயற்சி படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இதனிடையே அஜித்சமீபத்தில்இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில். குட் பேட் அக்லி என்ற படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும்சற்று விமர்சனங்களையும் சந்தித்தது. இதனிடையே தற்போது லைகா நிறுவனம்விடா முயற்சி படத்தை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில்சமீபத்தில், அஜித் அந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்து நடிகர் அரவ்வுடன் அவர் இருக்கும் புகைப்படம் வெளியானது.

இதனிடையே தற்போது அஜித்தின் விடா முயற்சி திரைப்படம், தீபாவளி தினத்தில் வெளியிட லைகா நிறுவனம் முயற்சித்து வருவதாக தனஞ்சேயன் தெரிவித்துள்ளார். இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்போது அது குறித்து கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். விடா முயற்சி படத்திற்கு பிறகு அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Actor Ajith
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment