காதலியை அறிமுகம் செய்த காளிதாஸ் ஜெயராம்
தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள ஜெயராம் தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவரது மகன் காளிதாஸ் ஜெயராம், தமிழில் மீன்குழம்பும் மண்பானையும், ஒரு பக்க கதை, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியான கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் அவரது மகனாக நடித்திருப்பார். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னட்டு, தாரணி காலிங்கராயருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள காளிதாஸ் இறுதியாக கமிட் ஆகிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
கவினை காதலிக்கும் நடிகை?
சமீபத்தில் வெளியான டாடா படத்தில் பிக்பாஸ் கவின் – அபர்னா தாஸ் இணைந்து நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் டாடா படம் வசூலில் சாதனை படைத்து வரும் நிலையில், டாடா படத்தில் கவினுடன் இணைந்து நடித்த அபர்னா தாஸ் உண்மையிலேயே அவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கவின் குறித்து அபர்னா தாஸ் வெளியிட்டுள்ள பெரிய பதிவே இந்த தகவலுக்கு காரணம்.
மகனை கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டாரா விஜய்?
தமிழ்சினிமாவின் முன்னணி நடிகான விஜய் தற்போது லியோ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது மகன் சஞ்சய் தற்போது குறும்படம் ஒன்றை இயக்கி வரும் நிலையில். அவர் சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே விஜய் தனது மகனை கிரிக்கெட் வீரராக மாற்ற வேண்டும் என்று நினைத்து வீட்டிலேயே சிறிய கிரிக்கெட் மைதானத்தை அமைத்ததாகவும், அவருக்காக பயிற்சியாளரை நியமித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது சஞ்சய் இயக்குனராக குறும்படங்களை இயக்கி வருகிறார்.
ஒடிடி தளத்தில் ஆதிக்கம் செலுத்தும் துணிவு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படம் துணிவு. மஞ்சுவாரியார், சமுத்திரக்கனி, ஜான் கோக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்த படம் ரசிகர்கள மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனிடையே சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான துணிவு படம் டாப் 10 வரிசையில் 3-வது இடததை பிடித்துள்ளது. இந்த படத்தின் ஹிந்தி பதிப்பு முதலிடத்தையும், தமிழ் தெலுங்கு பதிவு 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.
அஜித் – விக்னேஷ் சிவன் படத்தின் ட்ராப்புக்கு காரணம் நயன்தாராவா?
துணிவு படத்தை தொடர்ந்து அஜித் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளாகவும், தற்காலிகமாக ஏ.கே. 62 என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் இதில் த்ரிஷா நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் விக்னேஷ் சிவன் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். அவரது கதை திருப்திகரமாக இல்லை என்று தகவல் வெளியான நிலையில், இந்த படம் கைவிடப்பட்டதற்கு நயன்தாராதான் காரணம் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் நயன்தாராதான் நாயகியாக நடிக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் அடம் பிடித்ததே இந்த ட்ராப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil