சூர்யாவுக்கு போட்டியாகும் ஏ.கே.62
துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக ஏ.கே 62 என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் தளபதியின் லியோ படத்திற்கு போட்டியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை ஏ.கே 62 படத்தில் ஷூட்டிங் தொடங்காத நிலையில், படத்தை அடுத்த பொங்கல் தினத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதே நாளில் சூர்யாவின் 42 படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் சாம்பியன் ஆரிக்கு என்ன ஆச்சு?
நெடுஞ்சாலை மாயா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஆரி பிக்பாஸ் டைட்டில் வின்னராக இருந்தார். ஆனால் அதன்பிறகு ஆரிக்கு பல இயக்குனர்கள் கதை சொன்னதாகவும், அந்த கதைகளை கேட்ட ஆரி அதற்கு பெரிய மாற்றங்களை சொல்லியதாகவும், கூறப்படுகிறது. இதனால் பல இயக்குனர்கள் இவரிடம் கதை சொல்ல வந்து தலைதெறிக்க ஓடியதாக கூறப்படுகிறது.
தளபதி 68 விஜய்க்கு ஜோடி இவரா?
வாரிசு படத்திற்கு பிறகு விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்ததாக சென்னையில் நடைபெற உள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே தளபதி 68 படத்தை அட்லி அல்லது எச்.வினோத் இயக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இயக்குனர் யாராக இருந்தாலும் நாயகி சமந்தாதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.
4 நாட்களில் பத்து தல வசூல்
சிம்பு கவுதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 30-ந் தேதி வெளியான படம் பத்து தல. பிரியா பவானி சங்கர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படம் கன்னத்தில் வெளியான ம.ஃப்டி படத்தின் ரீமேக்கான வெளியானது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 4 நாட்களில் பத்து தல படம் 30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விடுதலை கலெக்ஷன் ரிப்போர்ட்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி பவானி ஸ்ரீ ஆகியோர் நடிப்பில் வெளியான படம் விடுதலை. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் மார்ச் 31-ந் தேதி வெளியான விடுதலை நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வசூலில் சாதனை படைத்து வருகிறது. அந்த வகையில் விடுதலை படம் 3 நாட்களில் சுமார் 20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“