scorecardresearch

ஏகே 62 தாமதம் ஏன்? வெங்கட் பிரபுவின் கஸ்டடி டீசர்… டாப் 5 சினிமா

சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் பேட்டியில் வட சென்னை படத்தின் நீளம் 5 மணி நேரம் இருந்ததாகவும், அனைத்து காட்சிகளும் அழகாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

AK 62 Custody

சம்பளத்தை உயர்த்திய கவின்

சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான இவர், லிப்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான டாடா படத்தில் நடித்தார். ரெமான்டிக் காமெடி படமாக வெளியான டாடா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் பாராட்டப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் தனது சம்பளத்தை 1.50 கோடியாக உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏகே 62 தாமதம் ஏன்?

துணிவு படத்திற்கு பிறகு நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி கமிட் ஆகியுள்ளார். படத்தின் பூஜை முடிந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. துணிவு படத்தின் வெற்றிக்கு நிகராக தனது அடுத்த படமும் இருக்க வேண்டும் என்றுஞ அஜித் விரும்புவதால், கதையை நன்கு மெறுகேற்ற இயக்குனர் மகிழ் திருமேனிக்கு அஜித் அழுத்தம் கொடுப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

வெங்கட் பிரபுவின் கஸ்டடி டீசர்

தமிழ் சினிமாவின் ஜாலி இயக்குனராக வெங்கட் பிரபு மாநாடு என்ற பெரும் வெற்றிப்படத்திற்கு பின் கஸ்டடி என்ற படத்தை இயக்கி வருகிறார். நாக சைதன்யா நாயகனாக நடித்து வரும் இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் தெலுங்கில் தயாராகி வரும் நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நஷ்டத்தை நோக்கி ஜெயம் ரவியின் அகிலன்

ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் படம் கடந்த மார்ச் 10-ந் தேதி வெளியானர். கடல் மற்றும் துறைமுகம் தொடர்பான கதைகளத்துடன் வெளியான இந்த படத்தை கல்யாண் கிருஷ்ணா இயக்கியிருந்தார். பிரியாக பவானி சங்கர், நாயகியாக நடித்த இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், முதல் நாளில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. ஆனால் அடுத்தடுத்து நாட்களில் விமர்சனங்களால் படத்தின் வசூல் குறைந்த நிலையில், தற்போது அகிலன் ஜெயம்ரவியின் திரைப்பயணத்தில் மோசமான படமாக அமைந்துள்ளது.

வட சென்னை படத்தின் நீளம் இவ்வளவா?

தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் தயாரான 3-வது படம் வட சென்னை. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலில் சாதனை படைத்தது. தொடர்ந்து படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் பேட்டியில் வட சென்னை படத்தின் நீளம் 5 மணி நேரம் இருந்ததாகவும், அனைத்து காட்சிகளும் அழகாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema ak62 announcement and venkat prabhu custody teaser

Best of Express