ஆல்பம் பாடல் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஐக்கி பெர்ரி வெளியிட்டுள்ள பிறந்த நாள் புகைப்படங்கள் இணையத்தில் வரவேற்பை பெற்று வருகிறது.
Advertisment
தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்து ஐக்கி, அங்குள்ள மகரிஷி வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். அதன் பின்னர் பாண்டிச்சேரியில் எம்பிபிஎஸ் படித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகி என்எஸ்கே ரம்யாவிடம் பாட்டு பயிற்சி பெற்ற ஐக்கி பெர்ரி, கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரியில் சேர்ந்தார். அதன்பிறகு ஐக்கி’ ஒரு பாடலாசிரியராக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார்.
அவரது பாடல் வரிகள் மற்றும் ட்யூன்’ இளம் இசை தயாரிப்பாளர் தேவ் மேஜர் மற்றும் ராப்பர் ஜாக்ஸ் ஈசன் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தது. பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்த ஐக்கி, தொடர்ந்து டெமோக்களை பதிவு செய்யத் தொடங்கினார்.
மேலும் பாடல்கள் எழுதுவது, ராப் மற்றும் இசையமைப்பது எப்படி என்று கற்றுக்கொண்டார். இந்த நேரத்தில்தான், இசை தயாரிப்பாளர் தேவ் மேஜர் “ஐக்கி பெர்ரி” என்ற மேடைப் பெயரை உருவாக்கினார்.
தனது பாடல்கள் மூலம் பிரபலமான ஐக்கி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆரம்பத்தில் ஐக்கியை பார்த்த பலரும் ஏதோ வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் போல என நினைத்தனர்.
தோற்றத்திலும், நடையிலும் பார்க்க தமிழ்ப்பெண்ணை போல இல்லாமல் பயங்கர மாடர்ன் லுக்கில் இருந்தாலும் அவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் என்பது பலருக்கும் தெரியாமல் இருந்தது. தற்போது தனது பிறந்த நாளை முன்னிட்டு ஐக்கி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“