சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியுள்ள அமரன் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவி தொடர்பான ப்ரமோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முனனணி நடிகராக உயாந்தவர் சிவகார்த்திகேயன். திரைப்படங்களில் அவ்வப்போது சிறுசிறு வேடங்களில் நடித்த மெரினா படததின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சிங்கம், ரஜினி முருகன், காக்கிச்சட்டை, எதிர்நீச்சல் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.
நடிகராக மட்டுமல்லாமல், ஒரு தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்துள்ள சிவகார்த்திகேயன், கனா என்ற மெகாஹிட் படத்தை தயாரித்து வெற்றி கண்டார். தற்போது தயாரிப்பு நடிப்ப என பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து அமரன் படம் வெளியாக உள்ளது. இந்திய ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளர்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சாய் பல்லவி, புவன் அரோரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதே சமயம்,டீசரில் சிவகார்த்திகேயன் கெட்ட வார்த்தை பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனாலும் அமரன் படத்திற்காக எதிர்பார்ப்ப ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Advertisment
Advertisements
அதேபோல் அமரன் படம் குறித்து அவ்வப்போது வெளியாகி வரும் தகவல்கள் எதிர்பார்ப்பை அதிகரித்து வரும் நிலையில், தற்போது சாய் பல்லவி தொடர்பான ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சாய் பல்லவி இந்து ரெபேக்கா வர்கீஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த கேரக்டருக்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. முதலில், முகுந்த் வரதராஜனின் மனைவியான ஒரிஜினல் இந்து ரெபேக்கா வர்கீஸ் வர, அதன்பிறகு சாய் பல்லவியின் காட்சிகள் தொடங்குகிறது.
இந்த ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களையும், படக்குழுவுக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் இந்த படத்தின் மூலம் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை குறிப்புகளை நாம் தெரிந்துகொள்ளலாம் என்பது கூடுதல் தகவல்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“