என்னைப்பற்றி வந்த முதல் கிசு கிசு; பிரபல நடிகரின் ஒற்றை வார்த்தை: சீக்ரெட் சொன்ன அம்பிகா!
என் தங்கை ராதாவுக்கு பாரதிராஜா இருந்தார். கமல்ஹாசன் ஸ்ரீதேவி போன்றவர்களுக்கு கூட காட்ஃபாதர் என்று ஒருவர் இருக்கிறார். ஆனால் எனக்கு அப்படி யாரும் இல்லை.
என் தங்கை ராதாவுக்கு பாரதிராஜா இருந்தார். கமல்ஹாசன் ஸ்ரீதேவி போன்றவர்களுக்கு கூட காட்ஃபாதர் என்று ஒருவர் இருக்கிறார். ஆனால் எனக்கு அப்படி யாரும் இல்லை.
80-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த அம்பிகா தற்போது சீரியல்கள் மற்றும் சினிமாவில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் நிலையில், சினிமாவில் தன்னைப்பற்றி வந்த முதல் கிசு கிசு என்ன அதற்கு நான் கொடுத்த ரியாக்ஷன் என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.
Advertisment
1976-ம் ஆண்டு வெளியான சோட்டானிக்கரை அம்மன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சீனமாவில் அறிமுகமானவர் அம்பிகா. தொடர்ந்து, 1979-ம் ஆண்டு சக்காளத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அம்பிகா, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்துள்ள அம்பிகா, தற்போது சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார்.
பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை அம்பிகா தமிழில், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ், மம்முட்டி, என்.டி.ராமராவ், கிருஷ்ணம் ராஜு, டாக்டர் ராஜ்குமார், அம்பரீஷ், சிரஞ்சீவி என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலருடன் இணநை்து நடித்துள்ளார். அம்பிகாவின் சகோதரி ராதாவும் அந்த நேரத்தில் பிரபல நடிகையாக இருந்தார். காதல் பரிசு உள்ளிட்ட பல படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது சீரியலிலும் கால் பதித்துள்ள நடிகை அம்பிகா சமீபத்திய பேட்டியில், தனது சினிமா வாழ்க்கை குறித்து பேசியுள்ளார். அதில், காட்ஃபாதர் இல்லாமல் சினிமாவில் வந்த முதல் ஆள் நான் தான். என் தங்கை ராதாவுக்கு பாரதிராஜா இருந்தார். கமல்ஹாசன் ஸ்ரீதேவி போன்றவர்களுக்கு கூட காட்ஃபாதர் என்று ஒருவர் இருக்கிறார். ஆனால் எனக்கு அப்படி யாரும் இல்லை. என்னை பார்த்து தான் ராதா சினிமாவுக்கு வந்தார்.
தொடக்கத்தில், அம்பிகாவின் தங்கை ராதா என்று சொன்னார்கள். ஒரு கட்டத்தில் அவர் ஹிட் படங்கள் அதிகம் கொடுத்தபோது, ராதாவின் அக்கா அம்பிகா என்று சொன்னார்கள். பரவாயில்லை பணம் வந்தால் எல்லாம் மாறிவிடும் என்று நினைத்துக்கொண்டேன். அன்றைய காலக்கட்டத்தில் சினிமாவில் கிசு கிசு எழுதுவார்கள். என்னை பற்றி முதல் கிசு, கிசு வந்தபோது அழுது ஆர்ப்பாட்டம் செய்தேன். அதன்பிறகு ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரேம் நசீர் சார் என்னிடம் என்ன என்று கேட்டபோது என்னை பற்றி கிசு கிசு வந்திருப்பதாக சொன்னேன். வந்தால் என்ன என்று அவர் கேட்டார்.
இப்படி வந்தால் நீ லைம்லைட்டில் இருக்கிறாய் என்று அர்த்தம் என்று சொன்னார். அன்று முதல் நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் கிசு கிசு வந்தால், நான் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் இன்று சமூகவலைதளத்தில் கிசுகிசுவை விட தரக்குறைவாக பேசுகிறார்கள் என்று ராதா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அந்த கிசு கிசுவில் அவர் நடித்து வந்த படத்தின் ஹீரோவும் இவரும் காதலிப்பதாக இருந்துள்ளது. இதை அம்பிகா இந்த பேட்டியில் கூறியுள்ளார்.