அம்மன் படத்தில் இந்த சிறுமி; வலிமை அஜித் தங்கை; இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? லேட்டஸ்ட் போட்டோ!

1995-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் தான் அம்மன். கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், ரம்யா கிருஷ்ணன் அம்மன் கேரக்டரில் நடித்திருந்தார்.

1995-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் தான் அம்மன். கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், ரம்யா கிருஷ்ணன் அம்மன் கேரக்டரில் நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Sunaina Badam Amman

சினிமாவில் காதல், த்ரில்லர் படங்களை போல் ஒரு காலத்தில் பக்தி படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இப்போது அதிகம் பேய் படங்கள் வெளியாகி வருவது போல் பக்தி படங்கள் அதிகம் வெளியாவதில்லை. போய் படங்கள் வெளியாகும்போது, படததின் க்ளைமேக்ஸில் சாமி வருவது போல் காட்சிகள் வரும். அதுதான் இப்போது தமிழ் சினிமாவில் பக்தி மயமாக இருக்கிறது.

Advertisment

அதேசமயம், 90 காலக்கட்டத்தில் பக்தி படங்களின் வருகை அதிகம் இருந்தது. தமிழில் மட்டும் இல்லாமல், மற்ற மொழிகளில் இருந்து பக்தி படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்படும் வழக்கமும் இருந்தது. அந்த வகையில், கடந்த, 1995-ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான திரைப்படம் தான் அம்மன். கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், ரம்யா கிருஷ்ணன் அம்மன் கேரக்டரில் நடித்திருந்தார்.

மேலும், சௌந்தர்யா, சுரேஷ், வடிவுக்கரசி, ராமி ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தில், சிறுவயது அம்மனாக நடித்திருந்தவர் தான் நடிகை பேபி, சுனைனா. சௌந்தர்யாவை காப்பாற்ற, அவரது இல்லத்திற்கு வேலைக்காரியாக வரும் பேபி சுனைனா பாதம், வீட்டில் இருக்கும் அனைவரையும், தனது பலத்தால் அச்சுறுத்தியிருப்பார். தனது நடை, பார்வை, நடிப்பு என அனைத்திரும் வித்தியாசம் காட்டி மிரட்டிய பேபி சுனைனா பாதம், இன்றும் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.

valimai Movie sister Sunaina Badam

Advertisment
Advertisements

இந்த படத்திற்கு பிறகு, 1996-ம் ஆண்டு ராமாயணம் என்ற படத்தில் நடித்திருந்த பேபி சுனைனா பாதம், மீண்டும் 2019-ம் ஆண்டு வெளியான ஓ பேபி என்ற படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த படத்தில் முழுக்க முழுக்க காமெடியில் கலக்கிய, சுனைனா பாதம், கடந்த 2022-ம் ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை திரைப்படத்தில் அவரின் தங்கை கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களில் நடித்த இவர், பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்திலும் நடித்திருந்தார்.

தற்போது அதிக படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் சுனைனா பாதம், சமீபத்திய ஒரு பேட்டியில், அம்மன் படம் குறித்து பேசியிருந்தார்.  அதில், நாம் வர்ணிக்க முடியாத ஒரு திரைப்படமாக அம்மன் இருக்கிறது. பட ஷூட்டிங் முடிந்ததும், இயக்குநர் கோடி ராம் கிருஷ்ணா சார், ஷ்யாம் சாருக்கு அவுட்புட் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்று நினைத்து, மொத்த படத்தையும் மீண்டும் முதலில் இருந்து தொடங்கினார், அதற்கு மூன்று வருடங்கள் ஆனது. அப்படித்தான் அந்தப் பயணம் அமைந்தது.

படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு பன்னிரண்டு டேக்குகள் ஆனது. ஏனென்றால் அது நள்ளிரவு இரண்டரை அல்லது மூன்று மணிக்கு அந்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போதும் என் எனர்ஜி தீர்ந்துவிட்டது. கேமராவை பார்த்து ஆக்ரோஷமாக கத்த வேண்டிய காட்சி அது. சிவப்பு, நீலம், மற்றும் மஞ்சள் நிறத்தில் இந்த காட்சியை எடுத்தார்கள். பல டேக்கள் ஆனதால் முதலில் நடித்ததுபோல் என்னால் நடிக்க முடியவில்லை, இதை பார்த்து இயக்குனர் கூலாக இருக்கிறார். ஆனால் எங்க அம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது என்ற கூறியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: