Advertisment

ஜவான் நடிகை நயன்தாரா... சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் வீழ்ச்சியும், எழுச்சியும்

ஷாருக்கான் மற்றும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடித்துள்ள அட்லீயின் ஜவான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், நயன்தாராவின் திரை வாழ்க்கையை ஆராய்ந்து, 'லேடி சூப்பர் ஸ்டார்' அந்தஸ்துக்கு அவரை உயர்த்திய காரணங்கள் குறித்து பார்ப்போம்

author-image
WebDesk
New Update
nayanthara

ஜவான் படத்தின் நட்சத்திர குழு வரிசையில், தனித்துவமான பெயர் என்றால் அது சந்தேகத்திற்கு இடமின்றி நயன்தாராவின் பெயர் தான்

தமிழில் இயக்கிய முதல் 4 படங்களையும் வெற்றிப்படங்களாக கொடுத்த இயக்குனர் அட்லி, தற்போது ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ஷாருக்கான் நாயகனாக நடித்து தயாரித்துள்ள இந்த படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது. ஜவான் படத்தை பார்ப்பதற்கு 2 முக்கிய காரணங்கள் உள்ளன.

Advertisment

ஒனறு இந்த படத்தில் பல தமிழ் நட்சத்திரங்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். பாலிட் நட்சத்திரம் நடித்துள்ள பாலிவுட் திரைப்படமாகவோ அல்லது தமிழ் நட்சத்திரங்கள் பல நடித்துள்ள தமிழ்த் திரைப்படமாகவோ நீங்கள் பார்க்கலாம். எப்படியிருந்தாலும், ஜவான், திரைப்படம் பாலிவுட் மற்றும் பிராந்திய மொழிகளுக்கு இடையே சிறப்பாக ஒரு ஒத்துழைப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.

ஜவான் திரைப்படத்தின் நடிகர்கள் குழுவில் ஷாருக்கான் தவிர்த்து முக்கிய நட்சத்திரம் என்றால் நயன்தாராவை சொல்லலாம். தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகையான நயன்தாரா தனது 20 வருட சினிமா வயத்தில் இதற்கு முன் இந்தி சினிமாவில் கால் பதித்தது இல்லை என்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுக்கலாம். ஆனால் அட்லி இயக்கிய முதல் படமாக ராஜா ராணி, தமிழில் கடைசி படமாக பிகில் என 2 படங்களிலும் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய சினிமாவே எதிர்பார்ப்பும் ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் நயன்தாரா தனது பயணத்தை தொடங்கியுள்ளார். நயன்தாராவின் திரை வாழ்க்கையை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

சினிமா ஆரம்பம்

மலையாளி பெற்றோருக்குப் பிறந்த டயானா மரியம் குரியன் 2003 ஆம் ஆண்டு தனது 19வது வயதில் வெள்ளித்திரை பயணத்தை தொடங்கினார். நயன்தாராவாக தன்னை மறுபெயரிட்டு, சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான மனசினக்கரேயில் என்ற படத்தில் அறிமுகமானார். அவர் நடித்த ஒரு கேரள கிராமத்தைச் சேர்ந்த வலிமையான மற்றும் சுதந்திரமான பெண்ணான கௌரி என்ற கேரக்டரில் சித்தரிப்பு ரசிகர்கள் மத்தியில்  உடனடி அங்கீகாரத்தைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மோகன்லால் படங்களான விஸ்மயத்தும்பத்து மற்றும் அடுத்த ஆண்டு நாட்டுராஜாவு ஆகிய படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், அவர் முன்னணி கேரக்டரில் நடிக்கவில்லை என்றாலும், நாட்டுராஜாவு படத்தில்அவரது நடிப்பு கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து 2005ல், தமிழில் வெளியான ஐயா படம் நயன்தாராவின் கேரியர் உண்மையிலேயே உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சந்திரமுகி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் அதிக நாட்கள் கடந்து சாதனை படைத்திருந்தது.  அதன்பிறகு மம்முட்டியுடன் தஸ்கரா வீரன் மற்றும் ராப்பகல் என தொடர்ந்து இரண்டு மலையாளத் திரைப்படங்களில் நடித்தார்.

மலையாள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நயன்தாரா அடுத்து ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த கஜினி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நயன்தாராவுக்கு சந்திரமுகிக்கு அடுத்து பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. அதேபோல் மலையாளத்தில் அவர் நடித்த தஸ்கரவீரன் படம் தவிர மற்ற அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால்  நயன்தாராவை அதிர்ஷ்டசாலி நாயகியாக திரையுலகம் பார்த்தது.

இந்த நேரத்தில், கஜினி படத்தில் "எக்ஸ்-மச்சி" என்ற பாடலில் அவரது நடனமும் பாராட்டுக்களை பெற்றது. அதே சமயம் துரதிர்ஷ்டவசமாக, இது நயன்தாராவின் திரை வாழ்க்கையில் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைத்தது. அவர் படங்கள் வணிக ரீதியாக வரவேற்பை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அவரது படங்களில் ஒரு 'ஐட்டம் பாடல்' இருப்பது போன்ற கதையாக அமைந்தது. இருப்பினும், இந்த சகாப்தம் நயன்தாரா புதிய உயரத்தை எட்டுவதைத் தடுக்கவில்லை. அவர் தனது கேரக்டரை தேர்வு செய்து நடித்ததால் நட்சத்திர அந்தஸ்துக்கு மாறினார்.

புகழின் உச்சத்தில் நயன்தாரா

தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து மலையாள சினிமாவில் இருந்து முற்றிலும் விலகிய நயன்தாரா, தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் தனது கவனத்தைத் திருப்பினார், அங்கு அவர் பெரிய திரைப்படங்களில் பெரிய கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், துரதிர்ஷ்டவசமாக, இந்த காலகட்டம் இரு மொழிகளிலும் முக்கியமாக ஆண் கேரக்டர்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களைத் தயாரிக்கும் காலமாக இருந்தது. இதனால் பெரும்பாலான படங்களில் பெண் கேரக்டர்கள் வெறும் காதல் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தனர். ஆயினும்கூட, நயன்தாரா தனக்கு வந்த ஒவ்வொரு குறிப்பிடத்தக்க திரைப்பட வாய்ப்பையும் ஏற்றுக்கொண்டு அதில் முன்னணி பெண் கேரக்டர்களை கைப்பற்றி நடித்தார்.

தெலுங்கில் தனது அறிமுக படத்தில் வெங்கடேஷுடன் இணைந்து நடித்த நயன்தாரா, அடுத்து நாகார்ஜுனா அக்கினேனியுடன் பாஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். அதே நேரத்தில் தமிழில் சரத்குமாருடன் தலைமகன் மற்றும் சிம்புவுடன் வல்லவன் உள்ளிட்ட வெற்றிகரமான தமிழ்ப் படங்களிலும் நடித்திருந்தார். ஆனாலும் இந்த படங்கள் அவரது நடிப்புத் திறமைகளை வெளிக்கொண்டுவருவதில் இருந்து தவறிவிட்டது.

அதேபோல் பெரும்பாலான திரைப்படங்களில் அவரது அழகையே பெரிதும் நம்பியிருந்தன. நயன்தாரா தனது படங்களில் இயல்பான தருணங்களை அதிகம் பயன்படுத்தி, திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்தாலும், இந்த முயற்சிகள் பெரும்பாலும் கவனிக்கப்படாமல் போய்விட்டது. மறுபுறம், 2007 இல், நயன்தாரா யோகி, துபாய் சீனு, துளசி மற்றும் பில்லா போன்ற தொடர்ச்சியான பிளாக்பஸ்டர்களில் நடிக்கத் தொடங்கினார்.

இதன் முலம் தன் கவனத்தை முழுவதுமாக சினிமாவின் மீது திருப்பி ஸ்ரீதேவிக்கு பிறகு தென்னிந்தியாவில் நடிகர்களுக்கு இணையான ஒரு கேரக்டரை பெற்று கவனம் ஈர்த்திருந்தார். நயன்தாராவின் ஸ்டைல் மற்றும் ஸ்வாக் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் திறமையும், அவரது கேரக்டர்களின் தேவைகளை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கான அவரது விருப்பமும் அவரது அந்தஸ்தை உயர்த்தியது. அடுத்தடுத்த ஆண்டுகளில், அவர் தொடர்ந்து முக்கிய படங்களில் நடித்து பிஸியாக இருந்தார்.

பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து நட்சத்திர உச்சத்தை அடைந்ததும், நயன்தாரா மீண்டும் மலையாளத் திரையுலகிற்குத் திரும்பினார், அங்கு அவர் தனது நடிப்பு திறமையை வெளிக்கொண்டு வரும் கேரக்டர்களை தேர்வு செய்து நடித்தார். அதன்படி சித்திக்கின் பாடிகார்ட் படத்தில் அவரது கேரக்டர் மற்றும் நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது, ஒரு நடிகராக அவரது ஆழத்தை வெளிப்படுத்தியது. அடுத்து தமிழில் பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் எலெக்ட்ரா போன்ற முக்கிய பாத்திரங்களைத் தொடர்ந்து தேர்ந்தெடுத்தார், இது ஒரு நட்சத்திரமாக இல்லாமல் ஒரு நடிகராக அவரது சினிமா கெரியரில் நல்ல பெயரை பெற்று தந்தது.

துரதிர்ஷ்டவசமாக, திருமணமான பிரபுதேவாவுடனான அவரது வதந்தியான உறவு, இதற்கிடையில், அவருக்கு குறிப்பிடத்தக்க விமர்சனத்தை கொண்டு வந்தது. விநோதமாக, அந்த விவகாரத்தில் இரண்டு நபர்களின் தொடர்பு இருந்தபோதிலும், நயன்தாரா மிகவும் பகிரங்கமான எதிர்ப்பைச் சந்தித்தார். தொடர்ந்து 2012ல் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகின. ஒரு குடும்பத்தின் சரிவில் அவர் ஈடுபட்டதன் விளைவு என்று பலர் நயன்தாரா குறித்து சர்ச்கை கருத்துக்களை கூறினாலும், நயன்தாரா இந்த சர்ச்சைகளுக்கு பதிலளிக்க விரும்பவில்லை.

மீண்டும் சினிமாவில் உச்சம்

அதன்பிறகு 2013-ம் ஆண்டு, அட்லீ தனது அறிமுகம படமாக ராஜா ராணி மூலம் நயன்தாராவின் ரீ-என்டரிக்கு வழி செய்தார். இழந்த காதலின் வலியை சமாளிக்க போராடும் இளம் பெண்ணின் கேரக்டரை நயன்தாரா அருமையாக கண்முன் நிறுத்தியிருந்தார். இந்த கேரக்டர் அவரது நடிப்பு திறன்களின் ஒரு பக்கத்தை வெளிப்படுத்த உதவியது. மேலும் அவரது சொந்த வாழ்க்கை அனுபவங்களுடனான கதாபாத்திரத்தின் நுட்பமான ஒற்றுமைகள் ரசிகர்களின் ஓரளவு மாற்றுவதாக அமைந்தது.

இருப்பினும், நடிகர் தனது இடத்தை விட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். அதன் காரணமாக அதே ஆண்டில், அவர் தமிழ் ஆக்ஷன் த்ரில்லர் ஆரம்பம் திரைப்படத்தில் அஜித் குமாருடன் இணைந்து நடித்தார், அதே நேரத்தில், நயன்தாரா தனது 2.0 என்று ரசிகர்கள் கொண்டாடினர். அதன்பிறகு பெண் கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களை தேர்வு செய்த நயன்தாரா, வித்யா பாலன் நடிப்பில் வெளியான கஹானியின் ரீமேக்கான அனாமிகா திரைப்படத்தில் ஒரு சக்திவாய்ந்த கேரக்டரில் நடித்திருந்தார்.

அடுத்தடுத்த ஆண்டுகளில், பல வெற்றிப்படங்களில் நடித்து தனது உயரத்தை மேலும் அதிகரித்த நயன்தாரா, அவரது படங்களில் வணிக நோக்கத்திற்காக சேர்க்கப்பட்ட ஐட்டம் பாடல்களை தவிர்த்து முற்றிலும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கதைகளை தேர்வு செய்தார். அதன்படி மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் மற்றும் தமிழில் தனி ஒருவன் போன்ற ஹிட் படங்களை தேர்வு செய்த, நயன்தாரா மாயா மற்றும் நானும் ரவுடி தான் போன்ற நாயகிகளுக்கு முக்கியத்தவம் உள்ள படங்களையும் தவறவிடவில்லை. திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றியை பெறவில்லை என்றாலும், அவரது ரசிகர் பட்டாளம் மாறாமல் இருந்தது, அவரது பெயர் மட்டுமே ஒரு சக்திவாய்ந்த சொத்தாக மாறியது.

அதன்பிறகு அறம் என்ற அரசியல் படத்தில் அவரது திறமை உண்மையிலேயே பிரகாசித்தது, ஒரு மாவட்ட ஆட்சியராக சிறப்பாக நடித்திருந்த நயன்தாரா, மேலும் பல பிளாக்பஸ்டர் வெற்றிகளை உருவாக்கும் அவரது திறனை உயர்த்திக் காட்டினார். 2018 ஆம் ஆண்டில், அவரது திரைப்படமான கோலமாவு கோகிலா அதிகாலைக் காட்சிகளைப் பெற்றதன் மூலம் அவரது நட்சத்திரம் அந்தஸ்து உயரத்திற்கு சென்றது, இது பொதுவாக சிறந்த ஆண் சூப்பர்ஸ்டார்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு சலுகை’. ஆனால் முதல்முறையாக பெண் நடிகைக்கு கொடுக்கப்பட்டது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இமைக்கா நொடிகள் என்ற தலைப்பில் அவர் தொடர்ந்து பட்டையை கிளப்பினார். இவை இரண்டும் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. இதன் விளைவாக, 2019 ஆம் ஆண்டில், அவர் மீண்டும் அஜித் குமாருடன் நடித்தபோது, விஸ்வாசம் படத்தில், நயன்தாராவின் குணாதிசயங்கள் அவரது முந்தைய கேரக்டர்களில் இருந்து கணிசமாக வேறுபடும் அளவுக்கு வித்தியாசமாக நடித்திருந்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் நயன்தாரா படங்கள்

2019 ஆம் ஆண்டு முதல் சில குறிப்பிடத்தக்க சாதாரணமான மற்றும் குறைவான படங்களில் நடித்திருந்தாலும், நயன்தாராவின் ரசிகர்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் அவர் வலுவான நடிப்பை கண்டு ரசிக்க தொடங்கிவிட்டனர். ஐரா, கொலையுதிர் காலம், லவ் ஆக்‌ஷன் டிராமா, தர்பார், நிழல், ஆரடுகுல புல்லட், அண்ணாத்தே, காத்துவாக்குல ரெண்டு காதல், மற்றும் தங்கம் போன்ற படங்களால் அவர் தோல்வியடைந்தாலும், மூக்குத்தி அம்மன் நெற்றிக்கண், O2 மற்றும் கனெக்ட்போன்ற சிறிய பட்ஜெட் படங்களை வெற்றிப்படங்களாக கொடுத்தார். இந்த காலகட்டத்தில், சிரஞ்சீவியுடன் இரண்டு பெரிய தெலுங்கு பிளாக்பஸ்டர்களான சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் காட்பாதர் ஆகியவற்றிலும் நயன்தாரா முக்கிய வேடங்களில் நடித்தார்.

இருந்தபோதிலும், சூப்பர் ஸ்டார் நயன்தாராவும், சூப்பர் ஸ்டார் அல்ட்ரா மேக்ஸ் ப்ரோ ஷாருக்கானும் முதன்முறையாக இணைந்திருப்பதால், ஜவான் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nayanthara
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment