New Update
/indian-express-tamil/media/media_files/FLdenwCxP8LlBehi0Clu.jpg)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் சமீப காலமாக சினிமா மட்டுமல்லாமல் அரசியல் தொடர்பான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது அவரது வீட்டில் இருந்து சொகுசு கார் ஒன்று வெளியில் வருவது போன்று வெளியாகியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளம் வைத்திருக்கும் நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் விஜய். சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய இவர், கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார். இதன் காரணமாக விஜய் நடிக்க உள்ள அடுத்தடுத்து படங்கள் குறித்து பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விஜய் தனது முதல் அரசியல் மாநாடு தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதேபோல் விஜய் தனது திரையுலகின் கடைசி படமாக எச்.வினோத் படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்தும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, மறுபுறம், கட்சியின் கொடி முதல் மாநாடு தொடர்பான அறிவிப்புக்காக தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
இதனிடையே தற்போது விஜய் வீட்டில் இருந்து புதிய சொகுசு கார் ஒன்று வெளியில் வரும் வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கார் விஜய் பயன்படுத்தி வரும சொகுசு கார்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த கார் லெக்சஸ் எல்.எம்.மாடல் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த காரின் எக்ஸ் ஷோரும் விலை ரூ2 கோடியில் இருந்து தொடங்குகிறது. எம்.வி.பி ரகமான இந்த காரில் ஏராளமான ஆடம்பர வசதிகள் உள்ளது.
நடிகர் விஜயின் புத்தம் புதிய சொகுசு கார்
— Thanthi TV (@ThanthiTV) August 13, 2024
இணையத்தில் பரவும் வீடியோ#ActorVijay #TVK #Vijay #Car #Vijaynewcar #Lexus #lexuslm pic.twitter.com/2gj6tRXN3r
இது குறித்து வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் விஜயின் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.