இன்றைய காலக்கட்டத்தில் தியேட்டர்களை போல் ஒடிடி தளங்களும் வார வார புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தியேட்டர்களில் வெளியாகும் படங்களை விடவும் ஒடிடி தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸ்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
அதேபோல், தியேட்டர்களில் வெளியாகும்போது பார்க்க முடியாத சில படங்கள் எப்போது ஒடிடி தளத்தில் வரும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். இதன் காரணமாக வார இறுதியில் தியேட்டர்களை போலவே ஒடிடி தளங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் ஒடிடி தளங்களில் வெளியாகும் புதிய வெப் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்கள் குறித்து பார்ப்போம்.
கிங்டம் ஆப் தி பிளானெட் ஆப் தி ஆப்ஸ்
வெஸ்பால் இயக்கத்தில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த படம் தற்போது ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. மனித குரங்குகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், பிரேயா ஆலன், கெவின் டுரண்ட், சாரா விம்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தற்போது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
பிருந்தா
சூர்யா மனோஷ் வங்களா இயக்கத்தில் வெளியாகியுள்ள புதிய வெப் சிரீஸ் பிருந்தா. நடிகை த்ரிஷா முதன்மை கேரக்டரில் நடித்துள்ள இந்த தொடரில், இந்திரஜித் சுகுமாரன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடர் சோனிலிவ்வில் வெளியாகியுள்ளது.
எ குட் கேர்ஸ் கைடு டூ மர்டர்
ஹோலி ஜாக்சன் எழுதிய எ குட் கேர்ஸ் கைடு டூ மர்டர் என்ற நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸில், வெனஸ்டே படத்தில் நடித்த எம்மா மேயர்ஸ் நடித்துள்ளார். 6 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ் தற்போது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
மார்டர்ன் மாஸ்டர்ஸ்
சினிமா துறையில் இயக்குனர் ராஜமெளலியின் பங்களிப்பை போற்றும் வகையில், எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான் மார்டர்ன் மாஸ்டர்ஸ். அப்ளாஸ் எண்டர்டெண்மெண்ட், மற்றும் பிலிம் கம்பெனியன் இணைந்து தயாரித்துள்ள இந்த படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
ரயில்
இயக்குனர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தியேட்டரில் வெளியான ரயில் திரைப்படம் தற்போது ஆஹா ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“