Advertisment

ஹாட் ஸ்பாட் முதல் கள்வன் வரை : மே 17-ல் வெளியாகும் முக்கிய திரைபடங்கள், வெப் சிரீஸ்கள்

மே 17-ந் தேதி திரையரங்கு மற்றும் ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள்

author-image
WebDesk
New Update
Ott Release On May 17th

மே 17-ல் வெளியாகும் ஒடிடி திரைப்படங்கள்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பொதுவாக திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறிப்பிட்ட சில வாரங்களுக்கு ஒடிடி தளத்தில் வெளியாகவது வழக்கம். இதில் தமிழகத்தில் ஒரு திரைப்படம் வெளியான 4-வாரங்களில் ஒடிடி தளத்தில் வெளியாகும் நிலையில், பாலிவுட் சினிமாவில் 8 வாரம் கழித்தே ஒடிடி தளத்தில் திரைப்படங்கள் வெளியாகும். அதேபோல் ஒடிடி தளத்தில் வெளியாகும் வகையில் திரைப்படங்களும் தற்போது தயாராகி வருகிறது.

Advertisment

கொரோனா காலத்தில் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த ஒடிடி தளங்கள், தற்போது தங்களுக்கென தனியான வெப் சிரீஸ் மற்றும் திரைப்படங்களை தயாரிக்க தொடங்கியிருக்கும் நிலையில், முன்னணி நட்சத்திரங்கள் பலரும் ஒடிடி தளத்திற்காக படங்கள் மற்றும் வெப் சிரீஸ்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதே சமயம் ஒடிடி தளங்கள் திரைப்படங்களையும் வாங்கி வெளியிட்டு வருகின்றனர்

அந்த வகையில் இந்த வாரம், ஒடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சிரீஸ்கள் குறித்து பார்ப்போம்.

ஹாட் ஸ்பாட்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான தமிழ் படம் "ஹாட் ஸ்பாட்" கலையரசன் ஹரிகிருஷ்ணன், சோபியா, கௌரி கிஷன், ஆதித்ய பாஸ்கர், சாண்டி, அம்மு அபிராமி, சுபாஷ் மற்றும் ஜனனி ஐயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இந்த படம் கடந்த மார்ச் 29 அன்று திரையரங்குகளில் வெளியானது.  நான்கு தனித்துவமான கதைக்களத்தை சிக்கலான முறையில் இணைத்து, ஒரு புதிரான சினிமா பயணத்தைத் கொடுத்தது இந்த படம். இந்த படம் வரும் மே 17 தேததி அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஆஹா தமிழில் வெளியாக உள்ளது.

இங்க நான் தான் கிங்கு

ஆனந்த் நாராயண் இயக்கிய பிளாக் காமெடி படம் இங்க நான் தான் கிங்கு. சந்தானம் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ப்ரியாலயா என்ற புதுமுகம் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தம்பி ராமையா, பால சரவணன், முனிஷ்காந்த், மறைந்த நடிகர் மனோபாலா, விவேக் பிரசன்னா, மாறன், கூல் சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இங்க நான் தான் கிங்கு கதாநாயகியாக அறிமுகமான நடிக்கவுள்ளார். மணப்பெண்ணைத் தேடி வரும் சந்தானம் சந்திக்கும் பிரச்சனைகளை மையக்கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படம், மே 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தலைமை செயலகம்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வசந்தபாலன் இயக்கியுள்ள வெப் சிரீஸ் தலைமை செயலாகம். அரசியலை மையமான கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள 8 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சிரீஸில், நடிகர் கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, பரத், ரம்யா நம்பேசன், ஆதித்யா மேனன், கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், தர்ஷா குப்தா, சாரா பிளாக், சித்தார்த் விபின், ஒய்ஜிஎம், சந்தான பாரதி, கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராடான் மீடியாவொர்க்ஸ் இந்தியா லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ராதிகா சரத்குமார் மற்றும் சரத்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படம் ஜீ5-ல் வரும் மே 17-ந் தேதி வெளியாக உள்ளது.

கள்வன்

கிராமபுறங்களில் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து வெளியான படம் கள்வன். ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் இவானா ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில், பாரதிராஜா மற்றும் தீனா ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். பிவி ஷங்கர் இயக்கியுள்ள இப்படம் வனப்பகுதியில் வாழும் இரண்டு குட்டி திருடர்களை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட:டுள்ளது. இதில் ஒருவர் வன அதிகாரியாக விரும்பி, அந்த வேலைக்கான பணத்தைப் பெறுவதற்காக, ஒரு முதியவரை நல்வாழ்வு இல்லத்திலிருந்து தத்தெடுக்கும் திட்டத்தைத் திட்டமிடுகிறார். இந்த படம் மே 14-ந் தேதி டிஸ்னி + ஹாஸ்டாரில் வெளியிடப்பட்டுள்ளது.

எலக்ஷன்

சேத்துமான் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் உறியடி புகழ் விஜய் குமார் நடித்துள்ள படம் எலக்ஷன். உள்ளூர் அரசியலை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மேரியன் மற்றும் பலர் துணைக் கதாபாத்திரங்களில் ப்ரீத்தி அஸ்ரானி மற்றும் பாவெல் நவகீதன் ஆகியோரும் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் மே 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ படம் மே 10-ந் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment