எமி ஜாக்சன் புதிய டாட்டூ
மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான எமி ஜாக்சன், தொடர்ந்து தெறி, 2.0 உள்ளிட்ட சில வெற்றிப்படங்களில் நடித்தார். மேலும் இந்தியிலும் நடித்துள்ள எமி தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் எமி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் டாட்டூ குத்துவது போன்று வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆண்ட்ரியாவின் மகளிர் தின ஸ்பெஷல்
தமிழ் சினிமாவில் நடிகை பாடகி, டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட ஆண்டரியா தற்போது பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், மகளர் தின ஸ்பெஷலாக ஆண்ட்ரியா மேலாடை இல்லாமல் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமந்தா வெளியிட்ட வித்தியாசமான புகைப்படம்
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் சரும நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வரும் நிலையில், மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சமந்தா தற்போது 25 மில்லியன் ஃபாலோயர்களை கடந்துள்ளார். இதனை கொண்டாடும் விதமாக மேக்கப் இல்லாமல் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பணமோசடியில் சிக்கிய நடிகை நக்மா
1994ம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நக்மா, தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து பாட்சா படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு மேட்டுக்குடி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்த நக்மா தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சமீபத்தில் கேஒய்சி விபரங்களை அனுப்ப வேண்டும் என்று நடிகை நக்மாவுக்கு மெசேஜ் வந்துள்ளது. அதை க்ளிக் செய்த நிலையில், அதன் விபரங்களையும் பகிர்ந்துள்ளார். இதனை பெற்றுக்கொண்ட மர்மநபர்கள் அவரது அக்கவுண்டில் இருந்து ஒரு லட்ச ரூபாய் பணத்தை எடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறப்புக்கு முன் கல்லறை கட்டிய நடிகை?
90-களில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ரேகா தற்போது படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் அவர் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனிடையே அப்பா மீது பாசம் கொண்ட ரேகா அவர் இறந்து அடக்கம் செய்த அந்த இடத்திற்கு அருகில் தனக்காகவும் ஒரு கல்லறை கட்டியுள்ளதாகவும், இறந்த பின்பும் அப்பாவின் அருகில் இருக்க வேண்டும் என்பதால் அவர் இவ்வாறு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/