வந்தபாலன் இயக்கத்தில வெளியான அங்காடித்தெரு படத்தில் சிறந்த குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகை சிந்து இன்று திடீரென மரணமடைந்தார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான படம் அங்காடித் தெரு. மகேஷ் அஞ்சலி இணைந்து நடித்த இந்த படத்தில் தனது குணச்சித்திர நடிப்பு மூலம் பலரின் பாராட்டுக்களை பெற்றவர் நடிகை சிந்து. அங்காடித்தெரு படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்த சிந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், தனது வாழ்க்கை மிகவும் கடினமாக இருப்பதாக கூறியிருந்தார். மேலும் புற்றுநோய் சிகிச்சை காரணமாக அவருக்கு முதலில் ஒரு பக்கம் மார்பகம் அகற்றப்பட்ட நிலையில், அடுத்த சில மாதங்களில் இரண்டு மார்பகங்களும் அகற்றப்பட்டது. இதன் காரணமாக கடுமையாக இன்னல்களை அனுபவித்து வந்த நடிகை சிந்து, வளசரவாக்கம் அன்பு இல்லத்தில் வசித்து வந்தார்.
இதனிடையே நடிகை சிந்து இன்று அதிகாலை 2 மணியளவில் மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவரது உடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை விருகம்பாக்கம் மின் மயானத்தில் அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. அங்காடித்தெரு சிந்து மரணம் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“