பிரசவம் முடிந்து 6 மாதம், குழந்தையை விட்டுட்டு நான் போய்ட்டேன்: கல்வி முக்கியம் பற்றி அங்காடித்தெரு நடிகை ஓபன் டாக்!

அங்காடித் தெரு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய நாகராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்ட சுகுணா, சொந்தமான ஃபியூட்டி பார்லர் நடித்தி வருகிறார்.

அங்காடித் தெரு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய நாகராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்ட சுகுணா, சொந்தமான ஃபியூட்டி பார்லர் நடித்தி வருகிறார்.

author-image
WebDesk
New Update
angadi theru ma

படிப்பின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, குழந்தை பிறந்து 6 மாதத்தில் நான் கல்லூரிக்கு படிக்க சென்றதாக, அங்காடித் தெரு படத்தில் நடித்த நடிகை சுகுனா தெரிவித்துள்ளார்.

Advertisment

அங்காடி தெரு படத்தில், சோபியா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் இந்த நடிகை. 2010-ம் ஆண்டு வசந்த பாலன் இயக்கத்தில் வெளியான அங்காடித் தெரு திரைப்படம் பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள கடை ஊழியர்களின் கடினமான வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இந்த படத்திற்கு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

மகேஷ், அஞ்சலி, வெங்கடேஷ், பாண்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படத்தில், சினேகா, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி மற்றும் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தனர். இந்த படத்தில், பாண்டி நடித்த மாரித்து கேரக்டரை காதலிக்கும் சோபியா கேரக்டரில் நடித்தவர் தான் நடிகை சுகுனா நாகராஜன். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மனத்தில் நீங்காத இடம் பிடித்தாலும், அதன்பிறகு சுகுணாவுக்கு வாய்ப்புகள் அமையவில்லை.

தற்போது இவரை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அங்காடித் தெரு படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய நாகராஜன் என்பவரை திருமணம் செய்துகொண்ட சுகுணா, சொந்தமான ஃபியூட்டி பார்லர் நடித்தி வருகிறார். சமீபத்திய வாவ் தமிழா யூடியூப் சேனலின் நேர்காணல் ஒன்றில், சுகுணா தனது வாழ்க்கையின் கடினமான காலகட்டங்களைப் பற்றி மனம் பேசிய அவர், படிப்பின் மீது தனக்கு உள்ள ஆர்வத்தையும், அதனால் தான் எடுத்த முயற்சிகள் குறித்தும் பேசியுள்ளார். 

Advertisment
Advertisements

இதில் பேசிய அவர், நான் 2008-ல் பி.எஸ்.சி கம்யூட்டர் சையின்ஸ் முடித்தேன். ஆனாலும் நிறைய அரியர் இருந்தது. சமீபத்தில் ஃபேசஷன் டிசைனிங் முடித்தேன். இந்த படிப்பை படித்தால் அவர் பண்ணும் படத்தில் நமக்கு காஸ்டியூம் டிசைனர் வேலை கொடுப்பார் என்று நினைத்தேன். இதற்காக நான் நிறைய படிக்க வேண்டும் என்று அவரிடம் சொல்லி டார்ச்சர் பண்ணி எடுத்துவிட்டேன். என் பையன் பிறந்த 6 மாதத்தில், குழந்தையை விட்டுவிட்டு படிக்க சென்றுவிட்டேன்.

கல்லூரி திறப்பதற்கு, 3 நாட்களுக்கு முன்னதாக நான் கல்லூரியில் சேர்ந்துவிட்டேன். ஒரு லட்சம் பீஸ் கட்ட வேண்டும் என்று சொன்னேன். கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, அன்பிறகு உனக்கு பிடித்ததை செய் என்று சொல்லிவிட்டார் என்று நடிகை சுகுணா கூறியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: