நடிகை ஆண்டரியாவுடன் காதலில் இருந்த இசையமைப்பாளர் அனிருத் தனது காதல் பிரேக்அப் ஆனது குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத் ரஜினி தொடங்கி முன்னணி நாயகர்கள் மட்டுமல்லாது வளர்ந்து வரும் இளம் நடிகர்களுக்கு தனது இசையால் வெற்றிப்படங்களை கொடுத்து வரும் அனிருத் சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி வரும் விக்ரம் படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல என்ற பாடல் பட்டிதொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பிய நிலையில், படத்தின் பின்னணி இசையிலும் அனிருத் அதகளம் செய்திருப்பார். இந்த படத்திற்கு வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒருவரான அனிருத் தற்போது ரஜினி – நெல்சன் இணையும் தலைவர் 169 படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ள அனிருத் கூடவே சர்ச்சைகளையும் தனக்கு பின்னால் அழைத்து வந்துள்ளார். குறிப்பாக இளம் நடிகைகள் பலருடன் கிசுகிசுக்கப்பட்ட இவர், நடிகை மற்றும் பாடகியான ஆண்டரியாவுடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்ரியா அனிருத் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாக பரவி வந்தது. அனிருத்தை விட ஆண்ட்ரியா 6 வயது மூத்தவர் என்றாலும் இவர்களின் காதல சமூகவலைதளங்களில் ஹாட் டாப்பிக்காக வலம் வந்தது.
#Anirudh About Breakup With #Andrea pic.twitter.com/rOCvqqAgoO
— chettyrajubhai (@chettyrajubhai) June 22, 2022
ஆனால் சில மாதங்கில் இந்த காதல் பயணம் முடிவுக்கு வந்தது. இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள அனிருத், தன்னை விட வயது குறைந்த பெண்னை திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஆண்ட்ரியாவுக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகம் என்பதால் அந்த ரிலேஷன்ஷிப் சரியாக வரவில்லை என்று கூறியுள்ளார். அனிருத்தின் இந்த வீடியோ பதிவு தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“