scorecardresearch

ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்த ரஜினியின் அண்ணாத்த!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 04ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.

ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்த ரஜினியின் அண்ணாத்த!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதற்கு முன்பே புதிய சாதனை படைத்துள்ளது. இது வரை வேறு எந்த தமிழ் சினிமாவும் இந்த சாதனையை படைத்ததில்லை என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா 2வது அலை பொது முடக்கத்துக்கு பிறகு, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு திரையரங்குகள் இயங்கி வருகின்றன. கோவிட் கட்டுபாடுகளைக் கடைபிடித்து பார்வையாளர்கள் திரையரங்குகளை நோக்கி செல்கின்றன. பெரிய ஸ்டார்களின் படங்கள் வெளியாகி மீண்டும் முன்பை போல, திரையரங்குகள் கலை கட்டும் என்று சினிமா துறையினரும் திரையரங்க உரிமையாளர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அந்த வகையில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் நவம்பர் 04ம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. அதனால், ரஜினி ரசிகர்களுக்கு அண்ணாத்த தீபாவளி அமைகிறது. சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாநகரங்களில் பெரும்பாலான திரையரங்குகளில் அண்ணாத்த திரைப்படத்தின் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதற்கு முன்பு தமிழ் சினிமா உலகில் புதியா சாதனை படைத்துள்ளது. அப்படி என்ன புதிய சாதனை என்றால், அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் 1100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமா உலகம் முழுவதும் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை என்று கோலிவுட் வட்டாரங்கள் வியப்பில் ஆழந்துள்ளது.

அதுமட்டுமல்ல, ரஜினியின் அண்ணத்த திரைப்படம் பிரான்ஸில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் சினிமா என்ற பெருமையைப் பெருகிறது. அதோடு, உலகின் மிகப்பெரிய திரையரங்கான ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள தி பேனாசோனிக் ஐமேக்ஸ் திரையரங்கில் அண்ணாத்த திரைப்படம் வெளியாகிறது.

இப்படி சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணத்த திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதற்கு முன்பே புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த சாதனையை வேறு எந்த தமிழ் சினிமாவும் நிகழ்த்தவில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாத்த திரைப்படத்தில், ரஜினிகாந்த் உடன் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். டி இமான் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema annaatthe movie big achievement before release

Best of Express