scorecardresearch

நாடி நரம்பு முறுக்க முறுக்க… அரங்கம் முழுக்க தெறிக்க… இணையத்தை கலக்கும் அண்ணாத்த மோஷன் போஸ்டர்…

Tamil Cinema Update : ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் அண்ணாத்த படத்தில் மோஷன் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

நாடி நரம்பு முறுக்க முறுக்க… அரங்கம் முழுக்க தெறிக்க… இணையத்தை கலக்கும் அண்ணாத்த மோஷன் போஸ்டர்…

Annaththe Movie Motion Poster Update : தர்பார் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் பல வருடங்களுக்கு பிற நடிகை குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் ரஜினியுடன் இணைந்து நடித்து வரும் நிலையில், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரப், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்தரங்களில் நடித்து வருகின்றனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்று காலத்தில் சிறிது தோய்வடைந்தது. அதன்பிறகு முழுவீச்சில் படப்பிடிப்பு பணிகளை முடித்த படக்குழு தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மும்பரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 4-ந் தேதி இந்த படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்து வருகின்றனர்.

மேலும் ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தும் விதமாக இன்று காலை அண்ணாத்த படத்தின் பர்ஸ்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது அண்ணாத்த படத்தில் மோஷன் போடர் வெளியாகி ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

ஒரு நிமிடம் 14 வினாடிகள் கொண்ட இந்த மோஷன் போஸ்டரில் புல்லட்டில் அரிவாளுடன் வரும் ரஜினிகாந்த்  நாடி நரம்பு முறுக்க முறுக்க, இரத்தம் மொத்தம் கொதிக்க கொதிக்க, அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க தொடங்குது ஓம்கார கூத்து என்று பஞ்ச் டைலாக் பேசுகிறார். இந்த மோஷன் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரஜினி ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.       

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema annaatthe movie motion poster going on viral

Best of Express