காட்டாறு… அவனுக்கு கரையும் கிடையாது… தடையும் கிடையாது… அதிரடி ஆக்ஷனுடன் அண்ணாத்த டீசர்

Tamil Cinema Update : ரஜினிகாந்த் நடிப்பில் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ள அண்ணாத்த படத்தில் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Annaatthe Movie Teaser Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். பண்டிகை காலம் மட்டுமல்லாமல் வருடத்தில் எந்ந நாளில் வெளியானாலும் ரஜினி படங்கள் பாக்ஸ்ஆபீஸில் ஹிட் அடிப்பது வழக்கமான ஒன்று. பொதுவான நாளில் வெளியானாலுமஇவரது படங்களை ரசிகர்கள் திருவிழாபோல் கொண்டாடி வருகின்றனர். அநத அளவிற்கு பாக்ஸ்ஆபீஸ் நாயகனாக வலம் வரும் ரஜினிகாந்த் தற்போது நடித்துள்ள படம் அண்ணாத்த.

சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில், குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்திசுரேஷ், யோகி பாபு, வேலா ராமமூர்த்தி, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என் பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டாக தயாரித்துள்ளது. வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி பணிகள் மும்பரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தை வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தில் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த போஸ்டரில் கையில் அரிவாளுடன் பைக்கில் வரும் ரஜினிகாந்த் ஆக்ரோஷமாக டைலாக் பேசுவதுபோன்ற வெளியிட்ப்பட்ட்டிருந்தது. அப்போதிருந்தே இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களுக்கு தொற்றிக்கொண்ட நிலையில், இந்த படத்தில் டீசர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். தற்போது அவர்களின் காத்திருப்புக்கு விடுதலை கொடுக்கும் வகையில், அண்ணாத்த படத்தில் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டீசர் முழுவதும் ரஜினியே ஆக்கிரமித்துள்ளார் என்று சொல்லாம். அந்த அளவிற்கு ஆக்ஷமான டைலாக் அதிரடி சண்டை காட்சி, பாம் பிளாஸ்ட், பல விறுவிறுப்பான காட்சிகள் நிறைந்துள்ள இந்த டீசர் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது என்று கூறலாம். இதில் கிராமத்தானை குணமாத்தானே பார்த்திருக்க கோவப்பட்டு பார்த்த்தில்லையே  காட்டாறு அவனுக்கு கரையும் கிடையாது தடையும் கிடையாது என்று ரஜினி ஆக்ரோஷமாக பேசும் டைலாக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil cinema annaatthe movie teaser released now

Next Story
குடும்ப வறுமை… எல்.ஐ.சி ஏஜெண்டாக பணி… பாரதிராஜாவால் அறிமுகம்… பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்தூரி லைப்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com