Advertisment

அண்ணாத்த டிக்கெட் ரூ2925? உதயநிதியை விமர்சித்த இயக்குனர்; பதிலடி கொடுத்த ரசிகர்கள்!

Tamil Cinema Update : அண்ணாத்த படத்தின் டிக்கொட் குறித்து விமர்னம் செய்த பிரபல இயக்குநருக்கு நெட்டிசனகள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
அண்ணாத்த டிக்கெட் ரூ2925? உதயநிதியை விமர்சித்த இயக்குனர்; பதிலடி கொடுத்த ரசிகர்கள்!

Annaatthe Movie Ticket Issue : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவரது நடிப்பில் தயாராகியுள்ள அண்ணாத்த படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ந்தேதி வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ் ஜெகபதி பாபு, சூரி, சதீஷ், உள்ளிட்ட பல நட்சத்திர படாளங்கள் நடித்துள்ளனர்.

Advertisment

அண்ணன் தங்கை பாசத்தை மைமாக கொண்ட இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள நிலையில், டி.இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீசர், மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுது்தியுள்ள நிலையில், படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏறபடுத்தியுள்ள இந்த படத்தை நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். தற்போது இந்த படத்திற்கான டிக்கொட் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், அண்ணாத்த படத்தின் டிக்கெட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் களஞ்சியம், அண்ணாத்த படத்தின் ஒரு டிக்கெட் விலை ரூ2925. இது பகற்கொள்ளை இல்லையா? முதல்வரின் மகன் இப்படி செய்யலாமா? அரசு அனுமதிக்கலாமா? தயாரிப்பாளர் சங்கம் கண்டிக்காதா?

இந்த கொரோனா காலத்தில் இதுபோன்று கொள்ளையடித்தால் மக்கள் எப்படி திரையரங்குக்கு வருவார்கள்? சிஸ்டம் கெட்டுப்போச்சுன்னவர் இதுபற்றி கேட்க மாட்டாறா என்று அடுக்கடுக்காக பல கேள்விகளை முன்வைத்துள்ளார்.

publive-image

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தயவு செய்து இந்த பதிவை நீக்குங்கள். அந்த டிக்கெட்டை நன்றாக பாருங்கள் அதில் 15 டிக்கெட்டுகளுக்காக விலை குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறி கடுமையாக விமர்சித்து வருகினறனர். இதனால் இயக்குநர் களஞ்சியம் உடனடியாக தனது பதிவை நீக்கியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Cinema Update Annaatthe Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment