scorecardresearch

நியாயமும் தைரியமும் பெண்ணுக்கு இருந்தா… அந்த சாமி துணையா இருக்கும்.. அதிரடியில் ரஜினி அண்ணாத்த டிரெய்லர்

Tamil Cinema Update : நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படம் தீபாவளி தினத்தில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நியாயமும் தைரியமும் பெண்ணுக்கு இருந்தா… அந்த சாமி துணையா இருக்கும்.. அதிரடியில் ரஜினி அண்ணாத்த டிரெய்லர்

Annaatthe Movie Trailer Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தற்போது சினிமாவின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது பெற்றவருமான நடிகர் ரஜினிகாந்த் தர்பார் படத்திற்கு பிறகு அண்ணாத்த என்ற படத்தில் நடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்துள்ளது. இந்த படத்தில் முன்னாள் நாயகிகளான மீனா மற்றும் குஷ்பு இருவரும் பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைந்து நடித்து்ளளனர்.

மேலும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், வேலா ராமமூர்த்தி, சூரி சதீஷ் யோகிபாபு, லிவிங்ஸ்டன் பாண்டியனராஜன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ரூபன் கவனித்து வருகிறார். இந்த படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வரும் நவம்பர் 04- ந் தேதி வெளியாக உள்ளது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த டீசருக்கு முன்னணி நடிகர்கள் பலரும்பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், சிலமணி நேரங்களில் யூடியூப் வலைதளத்தில் பெரிய சாதனையை நிகழ்த்தியது. மேலும் ட்விட்டர் தளத்தில் அண்ணாத்த தீபாவளி என்ற ஹேஸ்டேக் முன்னணியில் இருந்து வருகிறது.

இதனால் அண்ணாத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் மேலும் அதிகரிக்கும் வகையில், அண்ணாத்த படத்தின் டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன்பிச்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது அண்ணாத்த படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. காதல் ஆக்ஷன் செண்டிமெண்ட், காமெடி என அத்தனை அம்சங்களும் நிறைந்துள்ள இந்த டிரெய்லரில் இளமை துள்ளலுடன ரஜினிகாந்த தனியாக தெரிகிறார்.

மோஷன் போஸ்டர், டீசர் ஆகிய இரண்டிலும் ரஜினி மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தார். அதனால் இந்த டிரெய்லரில் அனைவரும் வரும வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும ரஜினி தனக்கே உரிதான காமெடி ஆக்ஷனில் தனியாக தெரிகிறார். தற்போது இந்த டிரெய்லர் இணையத்தில் வைராலாகி வரும் நிலையில், ரஜினி ரசிகர்களுக்கு படம் வெளியாகும் முன்பே பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema annaatthe movie trailer release update

Best of Express