/indian-express-tamil/media/media_files/lkh05mt912Zrooe5j1Gu.jpg)
அன்னப்பூரணி படப்பிடிப்பில் நயன்தாரா சத்யராஜ்
நயன்தாரா நடித்து வரும் அன்னப்பூரணி படத்தின் படப்பிடிப்பில் டூப்பை பயன்படுத்தாமல் அனைத்து உணவுகளையும் நயன்தாராவே தயாரித்து வருவதாக படக்குழு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் நயன்தாரா சமீபத்தில் வெளியான ஜவான் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானர். அதனைத் தொடர்ந்து தற்போது அன்னப்பூரணி தி காட்ஸ் ஆஃப் புட் என்ற படத்தில் நடித்து வருகிறார். சத்யராஜ், ஜெய், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த படத்தை, நிலேஷ் கிருஷ்ணா என்ற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் பல்வேறு தடைகளை எப்படி மிகப்பெரிய சமையல் கலைஞராக மாறுகிறார் என்பதே இந்த படத்தின் கதை. இந்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, படத்தின் உணவு தொடர்பான காட்சிகள் அதிகம் இருப்பதால், நயன்தாரா 100 சதவீதம் தன்னை ஒரு சமையல் கலைஞராகவே மாற்றிக்கொண்டுள்ளார்.
படப்பிடிப்பின்போது உண்மையான சமையல் கலைஞரை செட்டில் அமர வைத்துவிட்டு இவரே டூப் இல்லாமல் சமைக்கிறார். அதேபோல் உணவு இடைவேளையின் போது கேரவனுக்கு செல்லாமல், சக நடிகர்களுடன் படப்பிடிப்பு தளத்திலேயே இருக்கும் நயன்தாராவின் அர்ப்பணிப்பை பார்த்து, அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர் சில நாட்கள் படப்பிடிப்பு முடிய தாமதமாகி இரவு 12 மணிவரை படப்பிடிப்புகள் எல்லாம் நடந்துள்ளது.
அப்போது எல்லாம் தனது தனிப்பட்ட வேலைகளை கூட பொருட்படுத்தாமல், படத்திற்காக அதிகாலை 5 மணி வரை படப்பிடிப்பில் இருந்துள்ளார் என்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவுக்கு புகழாரம் சூட்டியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.