வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ படலுக்காக 3 விருதுகளை பெற்ற பாடகி மதுஸ்ரீக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் வெந்து தணிந்தது காடு. கேங்ஸ்டர் ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலில் சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் இப்போதும் பலரின் ரிங்டோனாக இருந்து வருகிறது.
வெளிநாடு வாழ் நபர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த பாடலை பாடகி மதுஸ்ரீ பாடியிருந்தார். இந்த பாடலை பாடிய அவருக்கு 3 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஹாட்ரிக் ஹாட்ரிக் ஆனந்தவிகடன் விருதுகள். மார்ச் 30 அன்று பிகைண்ட்வுடஸ்ட் கோல்ஸ் ஐகான் (behindwoodsgoldicons) விருதுகள் ஏப்ரல் 1 ஆம் தேதி, ஜேஎஃப்டபிள்யூ (jfw) விருதுகள் ஏப்ரல் 2 ஆம் தேதி .. சென்னையில் மல்லிப்பூ பாடலுக்காக என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், இந்த பதிவை மேற்கோள் காட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடகி மதுஸ்ரீக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் எப்படி விரைவாக தமிழைக் கற்றுக்கொள்வது என்பது குறித்து கியூரா (Quora) இணைப்பை கன்னத்துடன் பகிர்ந்து கொண்டார்.
Congrats 😍…… https://t.co/nI5Oh4sylG https://t.co/jFep5IPRw2
— A.R.Rahman (@arrahman) April 4, 2023
பெங்காலியைச் சேர்ந்த மதுஸ்ரீ, கடந்த காலங்களில் மெட்ராஸின் மொசார்ட்டுடன் பலமுறை இணைந்து பாடியுள்ளார். இந்த ஜோடி சாத்தியா, யுவா, ரங் தே பசந்தி, குரு மற்றும் ஜோதா அக்பர் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியது. 2022 ஆம் ஆண்டில், மதுஸ்ரீ ஆறு வருட இடைவெளிக்குப் பிறகு “மல்லிப்பூ” மூலம் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் வந்தார், இந்த பாடல் ரசிகர்கள் மத்தயில் நல்ல வரவேற்பை பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“