AR Rahman's debut film directorial 'Le Musk will' premiere at the Cannes Film Market's Cannes XR program: தமிழ் சினிமா மட்டுமல்லது இந்திய சினமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் ஏ.ஆர்.ரகுமான். 1992-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், முதல் படத்திலேயே தேசிய விருது மற்றும் தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெற்றார்.
தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது இந்தி ஆங்கிலம் உள்ளிட்ட200-க்கு மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். படங்களுக்கு இசையமைப்பது மட்டுமல்லாமல் ஆல்பம் பாடல்கள் வெளியிடுவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட தமிழ் மொழி தொடர்பான ஆல்பம் பாடல் பட்டி தொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பிக்கொண்டிருகிறது.
தாய் மொழியான தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் விதமாக பல ஆல்பம் பாடல்களை வெளியிட்டுள்ளார். ஸ்லாம்டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருது பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். தொடர்ந்து அடுத்த பரிமாணத்தை நோக்கி அடியெடுத்து வைத்த ரகுமான் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான அட்கன் சாட்கன் என்ற இசை தொடர்பான இந்தி படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கினார்.
தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான 99 சாங்ஸ் என்ற படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமான ரகுமான் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். வழக்கம்போல் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு லீ மஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. 36 நிமிடங்கள் கொண்ட இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ள ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாயிராவுடன் இணைந்து படத்திற்கான கதை திரைக்கதையை எழுதியுள்ளார்.
ஒரு பெண் தன் வாழ்நாளில் சந்தித்த பல ஆண்களை அவர்களின் உடல் வாசனை திரவியத்தை வைத்து எப்படி அடையாளம் காண்கிறாள் என்பதை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமானும் அவரது மனைவியும் லி மஸ்க் என்ற வாசனை திரவியத்திற்கு ரசகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள லி மஸ்க் திரைப்படம் பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. இதுநாள் வரை இசையமைப்பாளர் எழுத்தாளர் என்று இருந்த ஏ,ஆர்.ரகுமான் தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்து முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“