Advertisment

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங் : அர்ஜூன் அறிமுகமாக உதவிய விஜயகாந்த்; எப்படி தெரியுமா?

கடைசியாக, ஜெய்ஹிந்த் 2 என்ற படத்தை இயக்கிய தயாரித்து ஹீரோவாக நடித்திருந்த அர்ஜூன், தமிழ் சினிமாவில் அறிமுகமாக விஜயகாந்த் உதவியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Arjun Vijayakanth

அர்ஜூன் - விஜயகாந்த்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவில், பல வெற்றிப்படங்களில் நடித்து ஆக்ஷன் கிங் என்று பெயரெடுத்த அர்ஜூன், தமிழ் சினிமாவில் அறிமுகமாக ஒரு வகையில் விஜயகாந்த் தான் காரணம் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

Advertisment

கர்நாடகாவில் பிறந்த அர்ஜூன், ஒரு சில படங்களில் நடித்திருந்த நிலையில், 1984-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான நன்றி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்து, நாகம், யார், சங்கர் குரு, ஜெய்ஹிந்த், சேவகன், செங்கோட்டை உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகராக மட்டுமல்லாமல், இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமையுடன் தமிழ் சினிமாவில் வலம் வரும் அர்ஜூன், கடைசியாக, ஜெய்ஹிந்த் 2 என்ற படத்தை இயக்கிய தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். தற்போது முன்னணி நடிகர்களின் படங்கில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் அர்ஜூன் கடந்த ஆண்டு வெளியான விஜயின் லியோ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். 

தற்போது அஜித் நடிப்பில் தயாராகி வரும் விடா முயற்சி, உள்ளிடட சில படங்களில் நடித்து வரும் அர்ஜூன், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள அர்ஜூன், தமிழ் சிமாவில் அறிமுகமாக ஒரு வகையில் விஜயகாந்த் தான் காரணம் என்பது பலரும் அறியாத ஒரு தகவலாக உள்ளது.

கன்னடத்தில் வெளியான தாலியா பாக்யா என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் படம் தான் நன்றி. இந்த படத்தை நடிகர் ஏ.வி.எம்.ராஜன் தயாரித்திருந்தார். இந்த படத்தில் அர்ஜூன் வேடத்தில் நடிக்க முதலில் ஏ.வி.எம்.ராஜன் விஜயகாந்தை அனுகியுள்ளார். அப்போது விஜயகாந்த் பெரிய தொகையை சம்பளமாக கேட்டுள்ளார். அவர் கேட்ட சம்பளத்தை தர முடியாத நிலையில், இருந்த ஏ.வி.எம்.ராஜன் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடிக்குமாறு கேட்டுள்ளார்.

அன்றைய காலக்கட்டத்தில் ஏ.வி.எம்.ராஜனின் கோரிக்கையை ஏற்கக்கூடிய நிலையில், விஜயகாந்த் மற்றும் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர் இல்லை. அதனால் விஜயகாந்த் மறுத்துவிட்டார். அதே சமயம், இது கன்னட படம் தானே அந்த படத்தில் நடித்த பையனையே தமிழில் நடிக்க வைக்கலாமே என்று யோசனை தெரிவித்துள்ளார் விஜயகாந்த். அதன்பிறகு தான் நன்றி படத்தில் அர்ஜூன் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

கார்த்திக், நளினி, மகாலட்சுமி, உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்த நிலையில், அனைத்து பாடல்களையும் வாலியே எழுதியுள்ளார். படமும் பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அர்ஜூன் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி முன்னணி நடிகராக உயர்ந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth arjun
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment